தொடக்கக்கல்வி இயக்குநரின் காணொளி காட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டவை - நாள்.18/04/2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, April 21, 2023

தொடக்கக்கல்வி இயக்குநரின் காணொளி காட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டவை - நாள்.18/04/2023



தொடக்கக்கல்வி இயக்குநரின் காணொளி காட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டவை

நாள்.18/04/2023

1. எண்ணும் எழுத்தும் 2023-2024 ஆம் ஆண்டிற்கான 1 முதல் 3 வகுப்புகள் வரை உள்ள ஆசிரியர்கள் வட்டார அளவில் நடைபெறும் பயிற்சியில் விடுப்பு ஏதும் எடுக்காமல் அனைத்து ஆசிரியர்களும் தவறாது கலந்துகொள்வரை வட்டாரக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

(பயிற்சி நடைபெறும் நாள். 24.04.2023 முதல் 26.04.2023 முடிய 3 நாட்கள்)

2. எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெறும் நாட்களில் 1 முதல் 3 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரவேண்டிய அவசியம் இல்லை. இதர வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் வழக்கம்போல் பள்ளி நடைபெறும். 3. அரசாணை (நிலை) எண். 115 (பள்ளிக்கல்வித் துறை), நாள். 28.04.2022 இன்படி, வயது முதிர்வு காரணமாக கல்வி ஆண்டின் இடையில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு கடைசி வேலை நாளான மே மாதம் 31 வரை Re-Employment ஊதியம் பெற்று வழங்கப்பட வேண்டும்.

4. தமிழ்நாட்டில் மாணவர் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் குறைவாக உள்ள 3874 பள்ளிகளில் (திருச்சி மாவட்டத்தில் 110 பள்ளிகள்) மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு "அரசு பள்ளிகளை கொண்டாடுவோம்" விழிப்புணர்வு பேரணி ஏப்ரல் 17 முதல் நடத்தப்பட வேண்டும். மற்றும் மாணவர் சேர்க்கை அதிகரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். (இணைப்பு பட்டியல்)

5. 2023 ஆம் ஆண்டிற்கான நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான முன்னுரிமைப் பட்டியல் மற்றும் தேர்ந்தோர் பட்டியல் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைக்கடிதத்தில் தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முடித்து ஒப்புதல் பெற வேண்டும்.

(தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை - 6, 15.85.676081.6413/11/2023, 6. 19.04.2023)

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.