22.04.2023 அல்லது 23.04.2023 அன்று பிறை பார்த்த பின் ரம்ஜான் பண்டிகை - உருதுப் பள்ளி மாணவர்கள் மூன்றாம் பருவத்தேர்வு கால அட்டவணையை திருத்தம் செய்ய தொடக்கக் கல்வி இயக்குனருக்கு வேண்டுகோள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, March 27, 2023

22.04.2023 அல்லது 23.04.2023 அன்று பிறை பார்த்த பின் ரம்ஜான் பண்டிகை - உருதுப் பள்ளி மாணவர்கள் மூன்றாம் பருவத்தேர்வு கால அட்டவணையை திருத்தம் செய்ய தொடக்கக் கல்வி இயக்குனருக்கு வேண்டுகோள்

22.04.2023 அல்லது 23.04.2023 அன்று பிறை பார்த்த பின் ரம்ஜான் பண்டிகை - உருதுப் பள்ளி மாணவர்கள் மூன்றாம் பருவத்தேர்வு கால அட்டவணையை திருத்தம் செய்ய கோருதல் - சார்பு 🇹‌🇳‌🇵‌🇹‌🇦‌ வேண்டுகோள்...

ரம்ஜான் பண்டிகை ஏப்ரல் 22 அல்லது 23 அன்று வருவதால் உருதுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் நோன்பு இருப்பதை கருத்தில் கொண்டு சிறார்களின் நலனை காக்கும் வகையில் உருது பள்ளிகளின் மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவணை திருத்தம் செய்ய வேண்டும் என மதிப்புமிகு *தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர்* அவர்களுக்கு *தமிழ்நாடு துவக்கப் பள்ளி ஆசிரியர்கள் சங்கம்* TNPTA வின் மாநில அமைப்பு வேண்டுகோள்....

பெறுநர்

மதிப்புமிகு தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள்,

தொடக்கக் கல்வி இயக்குனரகம், கல்லூரி சாலை, சென்னை. அன்புடையீர்! வணக்கம்!!

தற்போது 22.04.2023 அல்லது 23.04.2023 அன்று பிறை பார்த்த பின் ரம்ஜான் பண்டிகை உள்ளது. அதற்கு முன்பு 18.04.2023 பெருநாள் பண்டிகை சபே பாராத் (RL) உள்ளது. நோன்பு நோற்கும் 30 நாட்களில் 7 வயது முதல் இஸ்லாமியர்கள் காலை 4.30 மணிக்கு உண்ட பிறகு மாலை 6.30 வரை வாயில் எச்சிலும் முழுங்க கூடாது. வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது.

எனவே, சிறார்களின் நலனைக் கருத்தில் கொண்டு உருதுப் பள்ளிகளில் மூன்றாம் பருவத் தேர்வுகள் அனைத்தும் 24.04.2023 முதல் 30.04.2023 வரை நடத்த உரிய ஆணைகள் பிறப்பித்திட வரும் கல்வி மானிய கோரிக்கை அன்று அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம்-(TNPTA) சார்பாக அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், உருது வட்டாரக் கல்வி அலுவலர்கள் இருக்கும் வரையில் உருது பள்ளிகளுக்கென தனியாக பள்ளி வேலைநாட்கள் பட்டியல் வெளியிடப்பட்டது போல அடுத்த கல்வியாண்டு முதல் உருதுப்பள்ளிகளுக்கென தனியாக பள்ளி வேலைநாட்கள் பட்டியல் அறிவிக்கவேண்டும் எனவும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.