இல்லம் தேடிக் கல்வி - "குறும்படம் கொண்டாட்டம்" – மாவட்ட அளவில் வெற்றி பெற்ற தன்னார்வலர்களுக்கு பரிசு வழங்குதல் - SPD Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, March 27, 2023

இல்லம் தேடிக் கல்வி - "குறும்படம் கொண்டாட்டம்" – மாவட்ட அளவில் வெற்றி பெற்ற தன்னார்வலர்களுக்கு பரிசு வழங்குதல் - SPD Proceedings

இல்லம் தேடிக் கல்வி - "குறும்படம் கொண்டாட்டம்" – மாவட்ட அளவில் வெற்றி பெற்ற தன்னார்வலர்களுக்கு பரிசு வழங்குதல் - சார்பு-

குழந்தைகளின் இல்லம் தேடிக் கல்வி மையங்கள் கடந்த ஓராண்டாக நன்முறையில் செயல்பட்டு வருகிறது. கற்றலை மேம்படுத்துவதற்கென எளிமையான மற்றும் புதுமையான கற்றல் உபகரணங்களை சிறப்பான, தன்னார்வலர்கள் உருவாக்கி கற்றல் கற்பித்தலில் ஈடுபட்டு வருகின்றனர். மையங்களில் "குறும்படக் கொண்டாட்டம்" கடந்த 20.02.2023 முதல் 27.02.2023 வரை நடைப்பெற்றது.

தற்போது மாணவர்களின் கற்பனைத் திறன். படைப்பாற்றல் திறன். சிந்திக்கும் திறன்களை வெளிக்கொணரும் விதமாக இல்லம் தேடிக் கல்வி இக்குறும்படக் கொண்டத்தில் பங்கேற்ற தன்னார்வலர்களின் படைப்புகளில் 3 சிறந்த குறும்படங்கள் தொடக்கநிலையிலும் 3 சிறந்த தொடக்கநிலை) தெரிவு செய்யப்பட்டு மாநிலத்திற்கு அனுப்பப்பட்டது.

குறும்படங்கள் உயர் தொடக்கநிலையிலும் ஒவ்வொரு வட்டார அளவிலும் தெரிவு செய்யப்பட்டு மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டது. அதில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் சிறந்த 6 குறும்படங்கள் ( 3 தொடக்கநிலை, 3 உயர் அதிலிருந்து சிறந்த 6 குறும்படங்கள் தெரிவு செய்யப்பட்டு அதனை உருவாக்கிய தன்னார்வலர்கள் ஒவ்வொருவருக்கும் 11.03.2023 அன்று சென்னையில் நடைபெற்ற சிறார் திரைப்பட விழாவில் சான்றிதழ் மற்றும் ரூ.10000/- க்கான காசோலையும் மையத்திலுள்ள மாணவர்களுக்கு ரூ.5000/- மதிப்பிலான பரிசு பொருள்கள் வழங்கப்பட்டது.

அது போன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் தெரிவு செய்யப்பட்ட 6 சிறந்த குறும்படங்களை (3 தொடக்கநிலை . 3 உயர் தொடக்கநிலை) இயக்கிய தன்னார்வலர்கள் ஒவ்வொருவருக்கும் சான்றிதழும், ரூ.2000/- க்கான காசோலையும் வழங்கப்பட வேண்டும். இச்சான்றிதழ் மாநில திட்ட இயக்ககத்தில் வடிவமைக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ. 12.000/- மாவட்ட இல்லம் தேடிக் கல்வி வங்கி கணக்கிற்கு விடுவிக்கப்பட்டுள்ளது. எனவே. தெரிவு செய்யப்பட்ட தன்னார்வலர்களுக்கு காசோலை மற்றும் சான்றிதழ் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.