அரசு பள்ளி வளாகத்தில் சக மாணவர்கள் தாக்கியதில் 10ம் வகுப்புமாணவர் உயிரிழப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, March 10, 2023

அரசு பள்ளி வளாகத்தில் சக மாணவர்கள் தாக்கியதில் 10ம் வகுப்புமாணவர் உயிரிழப்பு

A class 10 student was killed in an attack by fellow students in the government school campus

முசிறியில் 10ம் வகுப்பு மாணவன் கொலை.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே, தொட்டியம் பாலசமுத்திரம் அரசு பள்ளி வளாகத்தில், சக மாணவர்கள் தாக்கியதில் 10ம் வகுப்பு படித்து வந்த மாணவர் மெவுலீஸ்வரன் உயிரிழப்பு.

பள்ளி முன்பு மாணவரின் உறவினர்கள் சாலை மறியல்; மாணவரின் கொலை தொடர்பாக முசிறி டிஎஸ்பி யாஸ்மின் தலைமையிலான போலீசார் விசாரணை.

அரசுப்பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 10ம் வகுப்பு மாணவர் பலியானார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பால சமுத்திரம் பகுதியில்அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் தோளூர் பட்டியைச் சேர்ந்த கொத்தனார் வேலை செய்துவரும் கோபி என்பவரது மகன் மவுலிஸ்வரன் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்

இந்நிலையில் இன்று பள்ளி வளாகத்தில் அமர்ந்து மாணவர்கள் படித்துள்ளனர். அப்போது சக மாணவர்கள் சிறு சிறு கற்களை தூக்கிப்போட்டு விளையாடியதாக தெரிகிறது. இதில் சில மாணவர்கள் மவுலீஸ்வரன் தான் கற்களை தூக்கி வீசியதாக தவறாக எண்ணி மாணவன் மவுலீஸ்வரனை 3 மாணவர்கள் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் மாணவன் மௌலீஸ்வரன் படுகாயம் அடைந்துள்ளார். இதையடுத்து பள்ளி ஆசிரியர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு மாணவன் மவுலீஸ்வரன் கொண்டு செல்லப்பட்டார். மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த மவுலீஸ்வரனின் பெற்றோர்கள், உறவினர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு மாணவனின் இறப்புக்கு நியாயம் கேட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் திருச்சி - நாமக்கல் சாலையில் போக்குவரத்து பாதித்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் மூன்று மாணவர்களை தனியாக அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார்.

இச்சம்பவம் காரணமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகம் முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.