பள்ளிக்கல்வித்துறையின் கீழ் அனைத்து துறை பள்ளிகள் செயல்படும்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, March 19, 2023

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் அனைத்து துறை பள்ளிகள் செயல்படும்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

அனைத்து துறைகள் சார்பில் நடத்தப்படும் பள்ளிகள், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், இந்து சமய அறநிலையத்துறை நடத்தும் பள்ளிகளுக்கு கல்வித்துறை கீழ் செயல்படும் என அவர் தெரிவித்தார்.

பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.40,299 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். 54 அரசு தொழிற்பயிற்சி மையங்கள் திறன்மிகு பயிற்சி நிலையங்களாக மாற்ற ரூ.2783 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும்

இந்த பள்ளிகளில் பணியாற்றும் அனைவரின் பணிப்பலன்கள் பாதுகாக்கப்படும் - நிதியமைச்சர்

ரூ. 110 கோடியில் 4,5-ம் வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவாக்கம்தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழா- தமிழ்நாடு பட்ஜெட் வரும் ஆண்டில் 10 கோடி மதிப்பில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா மற்றும் இலக்கிய திருவிழா நடத்தப்படும் சர்வதேச புத்தக கண்காட்சி வரும் ஆண்டில் நடத்தப்படும் 54 அரசு ஐ.டி.ஐ.க்கள் திறன்மிகு தொழிற்பயிற்சி மையங்களாக மாற்றப்படும் - நிதியமைச்சர்

பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், வரும் நிதியாண்டிலும் ₹200 கோடி செலவில் பாலிடெக்னிக், கலை அறிவியல் கல்லூரிகள் மேம்படுத்தப்படும் - நிதியமைச்சர்

பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.40,299 கோடி @Kalvisei

புதிய பள்ளி கட்டடங்கள் கட்ட ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

500 கோடியில், 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படும்

"4ம் வகுப்பு மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.110 கோடி செலவில் எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவுபடுத்தப்படும்"

தமிழ்நாடு பட்ஜெட் : 2023 - 24

"4ம் வகுப்பு மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.110 கோடி செலவில் எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவுபடுத்தப்படும்"

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடித் திட்டம் ரூ.1000 கோடி ஒதுக்கீடு

காலை உணவு திட்டத்திற்கு ரூ.500 கோடி !

தொழிற்பயிற்சி திட்டத்துக்கு ரூ.50கோடி -

வரும் நிதியாண்டில் 10 லட்சம் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.