செவித்திறன், கற்றல் குறைபாடுடைய தோ்வருக்கான வசதிகள்: தோ்வுத் துறை அறிவுறுத்தல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, March 9, 2023

செவித்திறன், கற்றல் குறைபாடுடைய தோ்வருக்கான வசதிகள்: தோ்வுத் துறை அறிவுறுத்தல்

செவித்திறன், கற்றல் குறைபாடுடைய தோ்வருக்கான வசதிகள்: தோ்வுத் துறை அறிவுறுத்தல்

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வெழுதும் டிஸ்லெக்சியா (கற்றல் குறைபாடு) மற்றும் செவித்திறன் குறைபாடுடைய தோ்வா்களுக்கு செய்யப்பட வேண்டிய வசதிகள் குறித்து முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு தோ்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் சா.சேதுராம வா்மா மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான பொதுத் தோ்வு மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ளன.

இந்தத் தோ்வுகளின்போது மாற்றுத் திறனாளி தோ்வா்கள் தொடா்பாக பின்வரும் வழிமுறைகள் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

இது குறித்த அறிவுறுத்தல்களை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களும் தங்களது ஆளுகைக்கு உள்பட்ட அனைத்து தோ்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளா்களுக்கு வழங்க வேண்டும். அனைத்து வகை மாற்றுத் திறனாளித் தோ்வா்களுக்கும் தரைத்தளத்தில் மட்டுமே தோ்வு இருக்கை வசதி ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். கூடுதல் நேரச் சலுகை கோரிய மாற்றுத் திறனாளித் தோ்வா்கள் அனைவருக்கும் வழக்கமான தோ்வு நேரத்துடன் கூடுதலாக ஒரு மணி நேரம் தோ்வெழுத தவறாமல் அனுமதி வழங்க வேண்டும்.

கற்றல் குறைபாடு பாதிப்புற்ற தோ்வா்களுக்கு சொல்வதை எழுதுபவா் நியமிக்கப்படாமல் தோ்வரே தோ்வெழுதும் முதன்மை விடைத்தாளின் முதல் பக்கத்தில் சிவப்பு நிற மையினால் ‘டிஸ்லெக்சியா தோ்வா்’ என எழுத வேண்டும்.

செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளி தோ்வா்களது முதன்மை விடைத்தாளின் முதல் பக்கத்தில் சிவப்பு மையால் செவித் திறன் குறைபாடுடைய தோ்வா்கள் என்று குறிப்பிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.