பொது தேர்வு எழுதும் மாணவர் மாணவிகளுக்கும் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு பதிவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, March 12, 2023

பொது தேர்வு எழுதும் மாணவர் மாணவிகளுக்கும் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு பதிவு

தமிழகத்தில் +2 பொது தேர்வு எழுதும் மாணவர் மாணவிகளுக்கும் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு பதிவு

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ந்தேதி வரையிலும்,

11ம் வகுப்புக்கு 14-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 5-ந்தேதி வரையிலும்,

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.

இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றக்கூடிய வல்லமை படைத்த வருங்கால மாணவச் செல்வங்களே நாளை நடைபெற இருக்கும் பொது தேர்வை காலாண்டு அரையாண்டு தேர்வு எழுதுவது போன்று இந்த பொது தேர்வையும் பதட்டப்படாமல் பயமில்லாமல் படித்ததை நினைவுபடுத்தி கேட்கின்ற கேள்விகளுக்கு தெளிவான பதில்களை எழுதி நல்ல மதிப்பெண் பெற www.kalviseithiofficial.com சார்பாக தமிழகத்தில் உள்ள மாணவ மாணவியர் செல்வங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு குறிப்பாக பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை பயமுறுத்தாமல் அறிவுரைகள் கூறி ஆசிகள் வழங்கி பொதுத் தேர்வை எழுத வழிய அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். குறிப்பாக பல பிள்ளைகளின் பெற்றோர்கள் மாணவச் செல்வங்களை ஒழுங்காக தேர்வு எழுத வேண்டும் பெயில் ஆனால் தொலைத்து கட்டிடுவேன் கொன்று விடுவேன் அப்படியே ஓடி விட வேண்டியது தான் நாங்கள் கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறோம் ஒழுங்கா தேர்வு எழுதனும் எப்படி எல்லாம் மிரட்ட முடியுமோ அவரவர்கள் பிடித்த மொழியில் பிள்ளையிடம் பேசி பயமுறுத்தி அனுப்பி விடுகிறார்கள் இதில் மிரண்டு போன மாணவச் செல்வங்கள் கேள்வித்தாளை கையில் வாங்கியவுடன் மிகவும் பதட்டத்துடன் வாங்கி வைத்துக் கொண்டு நாம் சரியாக எழுதுவோமா எழுத மாட்டமோ அம்மா அப்பாவிற்கு எப்படி பதில் சொல்வது பெயில் ஆயிட்டா என்ன செய்வது என்றெல்லாம் மனதில் ஓடிக்கொண்டே தேர்வுகளை எழுதிவிட்டு வருவார்கள்.

காரணம் நீங்கள் பயமுறுத்துவது தான் அதற்கான காரணம் இதனால் தேர்வு எழுதிவிட்டு ரிசல்ட் வரும்வரை பதட்டத்தில் இருந்துகொண்டு மார்க்கு குறைவாக எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தாலோ தேர்ச்சி பெறாமல் இருந்தாலோ அப்படிப்பட்ட மாணவர்கள் பெற்றோருக்கு பயந்து கொண்டு வீட்டை விட்டு ஓடுவதும் தற்கொலை முயற்சிகளை எடுக்கும் நிலைக்குப் போய் விடுகிறார்கள் இதற்குக் பெற்றோர்கள் மிரட்டி அதிகமாக மதிப்பெண் எடுக்க வேண்டும் என திணித்தது தான் இதற்கு காரணம். மாணவ மாணவிகளே பெற்றோர்களே மதிப்பெண் என்பது அடுத்த கட்ட மேற்படிப்பு படிக்க அதற்குத் தானே தவிர மார்க்கை வைத்துக்கொண்டு எல்லாத்தையும் சாதித்து விடவும் முடியாது மார்க்கும் தேவை திறமைகளும் தேவை மாணவச் செல்வங்களே பெற்றோர்கள் திட்டினாலும் பரவாயில்லை நீங்கள் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் பரவாயில்லை கவலைப்படாதீர்கள் உடனடியாக விடுபட்ட பாடத்தை தேர்வு எழுதி தேர்ச்சி பெற அரசு வழிமுறைகள் செய்துள்ளது அதுலேயும் நம்மளால் தேர்ச்சி பெறமுடியவில்லை என்றாலும் அடுத்தது தனியார் டுடோரியல் டீயூசன் சென்டர் நிறைய இருக்கிறது அதில் படித்து நாம் விடுபட்ட பாடத்தை தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம் இப்படிப்பட்ட வழிமுறைகள் அதிகமாக இருக்கிறது கவலைப்படாதீர்கள் கோழைத்தனமான முடிவுகளையும் தவறான முடிவுகளையும் எடுக்காதீர்கள் www.kalviseithiofficial.com பெற்றோர்கள் திட்டினால் காதில் வாங்கிக் கொள்ளுங்கள் திரும்பிய சவால் விடுங்கள் நான் இது போன்ற வழிமுறைகள் இருக்கிறது கண்டிப்பாக தேர்ச்சி பெறுவேன் இந்த வருடம் இல்லை என்றாலும் அடுத்த வருடம் தேர்ச்சி பெறுவேன் என்று தன்னம்பிக்கையுடன் உங்கள் பெற்றோர்களிடம் கூறுங்கள். உங்கள் பெற்றோர்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வார்கள். மதிப்பெண் அதிகமாக எடுத்த மாணவ செல்வங்கள் அனைவரும் வேலைக்கு போய்விடுவதும் இல்லை மதிப்பெண் எடுக்காதவர்கள் அனைவரும் வேலைக்கு போகாமல் இருப்பதும் இல்லை அவரவர்கள் திறமையை பொறுத்து அவருடைய எதிர்காலம் அமைகிறது ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு திறமைகள் இருக்கும் அந்தத் திறமையை கண்டுபிடித்து பெற்றோரும் சரி மாணவச் செல்வங்களும் சரி அதற்கான பாதையை அமைத்துக் கொண்டு எதிர்காலத்தை சிறப்பாக எதிர்கொள்ளலாம் ஆகையால் மாணவர் செல்வங்களே தன்னம்பிக்கையை இழக்காதீர்கள் தேர்ச்சி பெற்றாலும் பெறவில்லை என்றாலும் பரவாயில்லை மேற்கண்ட வழிகள் பல இருக்கின்றன நமது நாட்டில் ஆகையால் மாணவச் செல்வங்களுக்கு எனது அன்பான வேண்டுகோள் தேர்வுகள் முடிந்து எதுவாக இருந்தாலும் பரவாயில்லை தைரியமாக இருங்கள் மேற்கண்ட வழிகளை கடைபிடியுங்கள் பெற்றோர்களே தங்கள் பிள்ளைகள் தேர்ச்சி பெற்றாலும் பெறவில்லை என்றாலும் பரவாயில்லை எதுவாக இருந்தாலும் அன்பாக பேசி அடுத்த கட்ட நகர்வை தங்களது பிள்ளைகளுக்கு வழிகாட்டி அவருடைய எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொடுக்க அனைத்து பெற்றோர்களும் முன் வர வேண்டும்

நாளை பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் அனைவரும் தங்கள் பெற்றோர்களை வணங்கி அவர்கள் நல்லாசியுடன் மிகச் சிறப்பாக தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெற www.kalviseithiofficial.com சார்பாக நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.