20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி TESTF நடத்தும் மாபெரும் உண்ணாவிரதம் - நாள் : 18-03-2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, March 12, 2023

20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி TESTF நடத்தும் மாபெரும் உண்ணாவிரதம் - நாள் : 18-03-2023

20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி. TESTF "நடத்தும் மாபெரும் உண்ணாவிரதம்

நாள் : 18-03-2023 சனிக்கிழமை,சாலை 10.00 மணி முதல் 5.00 மணி வரை இடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், திருச்சிராப்பள்ளி

20 அம்ச கோரிக்கைகள்

1. தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

2. தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆறாவது மற்றும் ஏழாவது மத்திய ஊதியக் குழு ஊதியற்றை கமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை முற்றிலும் களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும்.

3. EMS வலைத்தளத்தில் ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்யப்படுவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.

4.சிக் ஷா மித்ரா, சிக் ஷா கர்மி, நியோஜித் சிக் வடிம் ஆகிய திட்டங்களின் கீழ் அனைத்து மாநிலங்களிலும் பணிபுரியும் ஒப்பந்த ஆசிரியர்களை முறைப்படுத்தி நிரந்தரம் செய்திட வேண்டும்.

5. பள்ளி இணைப்புகள் கற்பித்தலுக்கு நன்னார்வலர்கள் நியமனம், ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களை அங்கன்வாடிகளில் பணியார்த்துவது போன்ற கல்வி நவனுக்கு எதிரான முடிவுகளை தேரிய கல்விக் கொள்கை 2070 இல் இருந்து நீக்கப்பட வேண்டும்.

6. ஒரே நாடு ஒரே கொள்கை என்ற ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும். மத்திய சுரசு இதற்கான நிதியை மாநில அரசுகளுக்கு வழங்கிட வேண்டும்.

7. தொடக்கக்கல்வித்துறையில் நடைமுறையிலுள்ள அரசாணை 101 மற்றும் 100ஐ தமிழக அரசு உடனடியாக ரத்து செய்து தொடக்கக் கல்வித் துறைக்கு என் தனி இயக்ககம் ஏற்படுத்தி முழுமையாகவும், சுதந்திரமாகவும் இயங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 8. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பதவியினை மீண்டும் உருவாக்கி, தொடக்கக்கல்வி இயக்குனரின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்.

9. வட்டாரக்கல்வி அலுவலர் பணியிடங்கள் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களாக மீள அறிவிக்கப்பட்டு தேர்வுநிலை சிறப்புநிலை உயர்கல்வி அனுமதி ஆகியவற்றை அனுமதிக்கும் அதிகாரங்களை அவ்வலுவலர்களுக்கு மீண்டும் வழங்கிட வேண்டும்.

10.பள்ளிக்கல்வித்துறை ஆணையர் பணியிடத்தினை ரத்து செய்து பழைய நிலையிலான பதவி உயர்வு வழி பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடம் தொடரச் செய்திட வேண்டும்.

11 ஆசிரியர்கள் அவ்வப்போது சமூக விரோதிகளாலு. ஒழுங்கீன நடத்தை உள்ளவர்களும் தொல்லைகளுக்கு ஆளாக பாதுகாப்பு அற்ற நிலையில் உள்ளனர். மருத்துவர்களுக்கு உள்ளது போல் ஆசிரியர்களுக்கும் பணிப்பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும்.

12. மாணவர்களின் கல்விந்திறனை மேம்படுத்துவதற்காக உயர்கல்வி படிந்து வரும் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வந்தது. இந்த ஊக்க ஊதிய உயர்வு 10:3 2020 முதல் நிறுத்தி வைக்கப்பட்டு, தற்போது மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி ஊக்கத்தொகையாக மாற்றி தமிழக அரசு வழங்கியிருப்பதை கைவிட்டு மீண்டும் பழைய முறையில் ஊக்க ஊதியம் ஊதியமாகவே வழங்கிட வேண்டும். 13. தமிழுக்கு முக்கியத்துவம் அவரிக்கும் வகையில் பி.லிட், பி.எட் படித்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்குவதில் ஏற்பட்டு வரும் தணிக்கைத்தடையினை நீக்கி பழைய முறையில் ஊக்க ஊதியம் தொடர செய்திட வேண்டும்.

14. மாணவர்களின் கல்வி நலனை மேம்படுத்தும் நோக்கோடு உயர்கல்வி படித்து பின் அனுமதிக்காக காத்திருக்கும் 5,500 ஆசிரியர்களுக்கு பின்னேற்பு வழங்கிட வேண்டும்.

15. 7வது ஊதிய குழு அறிக்கையின்படி இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊதிய கட்டில் உச்சபட்ச நிலையை எட்டும்போது, ஏற்படும் குழப்பத்தை தவிர்க்கும் வகையில் அரசாணை நிலை எண் 90 (நிதித்துறை நாள் 28.02.21)படி ஊதிய கட்டில் ஐந்து படிநிலைகளை உயர்த்தியது அந்த அரசாணையின்படி ஊதிய உயர்வு வழங்க மாவட்ட களவிலான கருவூல மற்றும் கணக்குத் துறை அலுவலர்கள் மறுத்து வருகின்றனர். எனவே அரசாணை 9Oன் படி ஊதிய கட்டு நிலைகளை உயர்த்தி வழங்க வேண்டும்.

16. ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு கடந்த மூன்று ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்ட காலத்திற்கான நிலுவைத் தொகையை உடனே ஒப்படைப்பு செய்ய அனுமதிக்க வேண்டும். 17. (அ) ஒவ்வொரு துறையிலும் பணிபுரியும் பணியாளர்கள் கீழ்நிலை பணியிலிருந்து பதவி உயர்வு மூலம் உயர் நிலைப் பணியிடத்திற்கு வர வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அது போல தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியமர்த்திடும் வகையில் பதவி உயர்வுகளில் 25 சதவீத பிரத்தியோ இட ஒதுக்கீடு செய்திடவேண்டும். (ஆரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத உயர்கல்வி இட ஒதுக்கீடு மற்றும் மூவலூர் ராமாமிர்தம் கல்வி உதவித்தொகை போன்ற சலுகைகளை அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கிட வேண்டும்..

18.நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டதால் நிலை இறக்கம் செய்யப்பட்ட 95 தொடக்கப் பள்ளிகளுக்கு தலைமையாசிரியர் பணியிடம் அனுமதித்தும், மேலும் கூடுதலாக தொடங்கப்பட்ட 20 தொடக்கப்பள்ளிகளுக்கும் தலைமையாசீரியர் பணியிடம் அனுமதித்து ஆணை வழங்க வேண்டும்.

19, மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படியினை நிறுவை இன்றி அறிவித்த நேறியில் இருந்தே வழங்கிட வேண்டும். @kalviseithi

20 ஆசிரியர் தகுதித் தேர்வை(TET) ரத்து செய்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக முன்னுரிமைப்படி ஆசிரியர் நியமனங்களை செய்திடவேண்டும். 16.11.2012 முன்பு அரசு உதவிபெறும் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு அவர்களின் 10 வருட கால ஆசிரியர் பணியினை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஆசிரியர் தருதிந்தேர்வு தேர்ச்சி பெறுவதில் இருந்து விலக்கு அளித்து தொடர்ந்து பணியாற்ற ஆணை வழங்கிட வேண்டும்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருச்சிராப்பள்ளி மாவட்டக்கிளை(அ).

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.