தேர்வு எழுதும் மாணவர்களின் கவலையை போக்க இலவச ஆலோசனை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, March 15, 2023

தேர்வு எழுதும் மாணவர்களின் கவலையை போக்க இலவச ஆலோசனை

தேர்வு எழுதும் மாணவர்களின் கவலையை போக்க இலவச ஆலோசனை

பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிட்டால் 104 இலவச ஆலோசனை எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

பிரச்சினைகள் அறிகுறிகள் இருப்பின் மாவட்ட மனநல ஆலோசனை மையத்தை அணுகலாம்.

திருப்பூர் :

தேர்வு எழுதும் மாணவர்கள் பசியின்மை, தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிட்டால் 104 இலவச ஆலோசனை எண்ணை தொடர்பு கொள்ளலாம் என திருப்பூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு ள்ளது. மாணவர்கள் அனைவரும் பொதுத்தேர்வு எழுதி வருகின்றனர். அவ்வகையில் மாணவர்கள் பலர், தேர்வுக்காக இரவு முழுவதும் கண் விழித்து படித்து வருகின்றனர்.அவர்களில் சிலர், கவலை, பசியின்மை, துாக்கமின்மை போன்ற பிரச்னைகளையும் எதிர்கொள்கின்றனர். இவற்றை சமாளிக்கவும், தேர்வுக்கு பயமின்றி தயாராவதற்கும் சில குறிப்புகளை மனநல மருத்து வர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து டாக்டர்கள் கூறியதாவது:- ஆசிரியர்- மாணவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு கால அட்டவணையை திட்டமிட வும், செயல்திறன்களை கவனித்து அதற்கேற்ப உதவலாம்.உடல், மனநலம் இரண்டுமே முக்கியம். தேர்வு அறையில் பிறர் மீது கவனம் செலுத்தாமல் தேர்வின் மீது முழு கவனம் செலுத்த வேண்டும்.

தொடர்ந்து ஒரே பாடத்தை படிக்காமல் மாற்றி மாற்றி படிக்கலாம். திருப்பூரில் மாவட்ட மனநலத்திட்டம் சார்பில் பள்ளிகள், தூக்கமின்மை, எரிச்சல், முன்கோபம், தலைவலி, உடல்வலி, அதிகம் பசியெடுத்தல், பசியின்மை இதுபோன்ற பிரச்சினைகள் அறிகுறிகள் இருப்பின் மாவட்ட மனநல ஆலோசனை மையத்தை அணுகலாம். அல்லது 104 இலவச ஆலோசனை எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.