குறும்படக் கொண்டாட்டம் - புதுப்புது கதைக்களம்! குழந்தைகள் குதுகலம்!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, March 1, 2023

குறும்படக் கொண்டாட்டம் - புதுப்புது கதைக்களம்! குழந்தைகள் குதுகலம்!!

குறும்படக் கொண்டாட்டம்

புதுப்புது கதைக்களம்.

குழந்தைகள் குதுகலம்

அறிமுகம்

இல்லம் தேடிக் கல்வி மையங்கள் கடந்த ஓராண்டாக நன்முறையில் செயல்பட்டு வருகிறது.

குழந்தைகளின் கற்றலை மேம்படுத்துவதற்கென சிறப்பான எளிமையான மற்றும் புதுமையான சுற்றல் உபகரணங்களை தன்னார்வலர்கள் உருவாக்கி கற்றல் கற்பித்தலில் ஈடுபட்டு வருகின்றனர். தன்னார்வலர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு உறுதிணையாக இயக்கி வரும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாரட்டுக்கள்,

தற்போது மாணவர்களின் கற்பனைத்திறன், படைப்பாற்றல் திறன் சிந்திக்கும் திறன்களை வெளிக்கொணரும் விதமாக இல்லம் தேடிக் கல்வி மையங்களில் குறும்படக் கொண்டாட்டம்- நடத்தப்பட்டு வருகிறது.

இதன்படி குழந்தைகள் தான்னார்வலர்களின் ஆதரவுடன் குறும்படங்களை இயக்கி வருகின்றனர். குறும்படத்தை மதிப்பீடு செய்வதற்கான மதிப்பெண் வழங்கல்

வட்டாரவள மைய ஒருங்கிணைப்பாளர் செய்ய வேண்டியவை:-

தன்னார்வலர்களிடம் இருந்து குறும்படங்களை பெறும் போது தன்னார்வலரின் பெயர். மைய எண் தொடர்பு எண், தன்னார்வலரின் மைய வகை, தன்னார்வலர் தேர்வு செய்திருக்கும் குறும்படத்திற்கான தலைப்பு ஆகியவற்றையும் பெற வேண்டும். 27.02-2023.ஆம் தேதிக்குள் குறும்படங்களையும், கொடுக்கப்பட்ட தலைப்புகளை கொண்டு எடுக்கப்பட்ட குறும்படங்களையும் மட்டுமே தேர்வுக்கு தெரிவு செய்தல் வேண்டும்.

அனுப்பப்படும் மேலே கூறிய மதிப்பெண் முறையைக் கொண்டு தொடக்கநிலையில் (Primary) சிறந்த 3 குறும்படங்கள், உயர் தொடக்க நிலையில் (Upper Primary) சிறந்த 3 குறும்படங்கள் என மொத்தம் 6 சிறந்த குறும்படங்களைத் தேர்வு செய்து மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்ப வேண்டும்.

* அக்குறும்படத்துடன், தன்னார்வலரின் பெயர், மைய எண் மைய வகை, தொடர்பு எண், தன்னார்வலரின் ஒன்றியம் மற்றும் தன்னார்வார் தேர்வு செய்திருக்கும் குறும்படத்திற்கான தலைப்பு ஆகியவற்றை குறிப்பிட்டு 02-03-2023ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செய்ய வேண்டியவை:

* வட்டாரவள மைய ஒருங்கிணைப்பாளரிடம் இருந்து குறும்படங்களை பெறும் போது, தன்னார்வலரின் பெயர், மைய எண் தொடர்பு எண், தன்னார்வலரின் மைய வகை தன்னார்வலர் தேர்வு செய்திருக்கும் குறும்படத்திற்கான தலைப்பு மற்றும் தன்னார்வலரின் ஒன்றியம் ஆகியவற்றையும் பெற வேண்டும்.

* 02-03-2023ம் தேதிக்குள் அனுப்பப்படும் குறும்படங்களையும். கொடுக்கப்பட்ட தலைப்புகளை கொண்டு எடுக்கப்பட்ட குறும்படங்களையும் மட்டுமே தேர்வுக்கு தெரிவு செய்தல் வேண்டும்.

+ மேலே கூறிய மதிப்பெண் முறையைக் கொண்டு தொடக்கநிலையில் (Primary) சிறந்த 3 குறும்படங்கள், உயர் தொடக்க நிலையில் (Upper Primary) சிறந்த 3 குறும்படங்கள் என மொத்தம் 6 சிறந்த குறும்படங்களைத் தேர்வு செய்து இல்லம் தேடிக் கல்வியின் மாநில மையத்திற்கு உங்களுக்கு தரப்படும் Google Forms வழியாக 04.032023 தேதிக்குள் அனுப்ப வேண்டும்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.