NEET UG (2023) : நீட் தேர்வு ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை எப்போது தொடங்கும்? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, March 1, 2023

NEET UG (2023) : நீட் தேர்வு ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை எப்போது தொடங்கும்?

NEET UG (2023) : நீட் தேர்வு ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை எப்போது தொடங்கும்?

நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் இளநிலை/முதுநிலை பட்ட மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது.

NEET UG (2023): 2023 ஆம் ஆண்டு மருத்துவ இளநிலை பட்டப் படிப்புக்கான நீட் விண்ணப்ப செயல்முறை வரும் மார்ச் முதல் வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானவுடன், மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 2019 தேசிய மருத்துவ வாரிய சட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் இளநிலை/முதுநிலை பட்ட மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் (தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு) மூலம் நடத்தப்படுகிறது. இந்திய அரசின், தேசிய தேர்வு முகமை இத்தேர்வை நடத்தி வருகிறது

முன்னதாக, 2023ம் கல்வியாண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் மே மாதம் 7ம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமையின் தேர்வு கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டது. ஜனவரி - பிப்ரவரி மாதத்தில் விண்ணப்பபங்கள் கோரலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில், விண்ணப்ப செயல்முறை மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்து தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, நீட் தேர்வு கூட்டாட்சிக் கொள்கைகளை மீறுவதாகவும், அரசியலமைப்பு சட்டம் வழங்கி சம உரிமையை மீறுவதாகவும் கூறி, முந்தைய அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருக்கும் மனுக்களை திருமப் பெற்று தமிழ்நாடு அரசு புதிய உரிய மனுக்களை (Original Suit) தற்போது பதிவு செய்துள்ளது.

தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள், நீட் தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை NTA இணையதளத்தில் neet.nta.nic.in இருந்து அறிந்து கொள்ளலாம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.