ஆசிரியர்களுக்கு 2023- 24 ஆம் கல்வியாண்டு முதல் பருவத்திற்கான பயிற்சி வழங்குதல் குறித்து SCERT இயக்குநரின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, March 23, 2023

ஆசிரியர்களுக்கு 2023- 24 ஆம் கல்வியாண்டு முதல் பருவத்திற்கான பயிற்சி வழங்குதல் குறித்து SCERT இயக்குநரின் செயல்முறைகள்

2023- 24 ஆம் கல்வியாண்டு முதல் பருவத்திற்கான ஒன்றிய அளவிலான பயிற்சி ஏப்ரல் 24,25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் வழங்குதல் குறித்து SCERT இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள் - Joint Proceedings of SCERT Director and Director of Elementary Education regarding the conduct of Union Level Training for the first term of academic year 2023-24 on April 24, 25 and 26
2022 - 2023 ஆம் கல்வியாண்டு முதல் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 3 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம். 2023- 2024 ஆம் கல்வியாண்டிற்கான எண்ணும் எழுத்தும் சார்ந்து தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடத்திற்கான முதல் பருவத்திற்கான பாடப்பொருள் உருவாக்கப்பணி மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்துள்ளது.

1 முதல் 3 ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எண்ணும் எழுத்தும் சார்ந்து முதல் பருவத்திற்கான மாநில, மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான பயிற்சிகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக. தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களுக்கு மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சியினை பில்லர் பயிற்சி மையம், நாகமலை புதுக்கோட்டை, மதுரை மாவட்டத்தில் 05.04.2023 முதல் 08.04.2023 (07.04.2023 விடுமுறை) வரை 3 நாள்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இணைப்பு (1) இல் மாவட்ட வாரியாக தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்கள் சார்ந்து முதன்மை கருத்தாளர்களின் பெயர் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. பெயர் பட்டியலில் உள்ள தகுந்த ஆர்வமிக்க, எண்ணும் எழுத்தும் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி கொண்டிருக்கும் ஆசிரியர்கள், கற்றல் கற்பித்தலில் மிகுந்த ஈடுபாடுடன் செயல்படும் ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் கல்வியாளர்களை பயிற்சியில் கலந்துகொள்வதற்கு பயிற்சி நடைபெறும் முதல் DIET நாளே பயிற்சி மையத்திற்கு இரவு 08.00 மணிக்குள் வருகை புரிவதற்கு ஏதுவாக பணி விடுவிப்பு செய்து அனுப்புமாறு சார்ந்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வளமைய அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதனைத் தொடர்ந்து மாவட்ட அளவிலான எண்ணும், எழுத்தும் சார்ந்த தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடத்திற்கான கருத்தாளர் பயிற்சி 10.04.2023. 11.04.2023 மற்றும் 12.04.2023 ஆகிய நாட்களில் நடத்திடுமாறும், அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான பயிற்சிக்கு திட்டமிடுவதற்கு 06.04.2023 அன்று கணிதம். 08.04.2023 அன்று ஆங்கிலம் மற்றும் 10.04.2023 அன்று தமிழ் என்று திட்டமிடல் கூட்டத்தை நடத்திடுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் ஒன்றிய அளவிலான பயிற்சியினை 24.04.2023. 25.04.2023 26.04.2023 வரை 1 முதல் 3 ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து மற்றும் ஆசிரியர்களுக்கும் நடத்திடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இக்கருத்தாளர் மற்றும் ஒன்றிய அளவிலான பயிற்சிக்கான செலவினத்தை அந்தந்த நிறுவன Programme and Activities நிதியிலிருந்து மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு தெரிவிக்கலாகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.