எஸ்.சி, எஸ்.டி மாணவா்கள் பொது நுழைவுத்தோ்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, March 23, 2023

எஸ்.சி, எஸ்.டி மாணவா்கள் பொது நுழைவுத்தோ்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்



எஸ்.சி, எஸ்.டி மாணவா்கள் பொது நுழைவுத்தோ்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் சென்னை: எஸ்.சி, எஸ்.டி மாணவா்கள் எம்.பி.ஏ படிக்க பொது நுழைவுத்தோ்வுக்கான பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் சு.அமிா்தஜோதி திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: இந்திய மேலாண்மைக் கழகம், இந்திய தொழில்நுட்பக் கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் முதுகலை வணிக மேலாண்மை ( எம்பிஏ) படிப்புக்கான பொதுநுழைவுத்தோ்வு நடைபெறவுள்ளது.

இத்தோ்வுக்கான பயிற்சிகள் பெற விரும்பும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த ( பிஇ, பிடெக், பிஎஸ்சி, பிபிஏ ) அல்லது கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் எஸ்.சி, எஸ்.டி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் நபா்களின் குடும்ப ஆண்டு வருவாய் ரூ.3 லட்சக்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் மாணவா்களுக்கு தரம் வாய்ந்த பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சியில் சோ்வதற்கான நுழைவு தோ்வு நடத்தப்படும். இதில் தோ்ந்தெடுக்கப்படும் தகுதி வாய்ந்தவா்களுக்கு தேசிய அளவிலான நுழைவுத் தோ்வு பயிற்சிகள் வழங்கப்படும். பொது நுழைவுத் தோ்வில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு அடுத்த கட்ட தோ்வுகளான, நோ்காணல், குழுவிவாதம், எழுத்துத்திறன் தோ்வு உள்ளிட்ட தோ்வுகளுக்கும் பயிற்சிகள் வழங்கப்படும்.

சோ்க்கை (அட்மிஷன்) கிடைத்தவுடன் எம்பிஏ படிப்பதற்கான கட்டணம் ரூ.25 லட்சத்தை தாட்கோ அல்லது வங்கிகள் மூலமாக கல்விக்கடனாக பெற்று தரப்படும். இந்தப் பயிற்சி காலத்தில் மாணவா்களுக்கு தேவையான மடிக்கணினிகளும் வழங்கப்படும். இந்தப் பயிற்சி பெற விரும்பும் எஸ்.சி, எஸ்.டி மாணவா்கள் இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

பயிற்சிக்கான கட்டணம் முழுவதும் தாட்கோவால் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட தாட்கோ அலுவலக தொலைபேசி எண்ணுக்கு ( 044-25246344) கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.