NCERT புதிய பள்ளி பாடப் புத்தகங்கள் அடுத்த கல்வியாண்டில் அறிமுகம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, March 27, 2023

NCERT புதிய பள்ளி பாடப் புத்தகங்கள் அடுத்த கல்வியாண்டில் அறிமுகம்

NCERT new school textbooks to be introduced next academic year

என்சிஇஆர்டி புதிய பள்ளி பாடப் புத்தகங்கள் அடுத்த கல்வியாண்டில் அறிமுகம்

புது தில்லி, மார்ச் 27: 'தேசிய கல்விக் கொள்கை (என்இபி) அடிப்படை யில் திருத்தியமைக்கப்பட்ட என்சிஇஆர்டி (தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்)-இன் புதிய பாடப் புத்தகங்கள் வரும் 2024-25 கல்வியாண்டு முதல் பள்ளிகளில் அறிமுகம் செய்யப்படும்' என்று மத் திய கல்வி அமைச்சக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில், 'தேசிய கல்விக் கொள் கையில் குறிப்பிட்டுள்ள '5+3+3+4' என்ற தேசிய கல்வி திட்டத்தின் (என் சிஎஃப்) அடிப்படையில், பள்ளி பாடப் புத்தகங்களை மேம்படுத்தும் பணி ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டது.

இது மிகப் பெரிய பணி. இந்தப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, புதிய பாட புத்தகங்கள் அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிகளில் அறி முகப்படுத்தப்படும். மேலும், கரோனா பாதிப்பு எண்ம (டிஜிட்டல்) கற்றலின் அவசி யத்தை நமக்கு உணர்த்தியுள்ளது. அந்த வகையில், புதிய பள்ளி பாட புத் தகங்கள் தயாரிக்கப்படும்போதே, எண்ம மயமாக்கும் பணிகளும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலமாக, அவை அறிமுகப்படுத் தப்பட்ட உடன், விரும்புபவர்கள் அனைத்து புத்தகங்களையும் இணை யத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்' என்றனர்.

மேலும், 'பாடப் புத்தகங்கள் நிலையானவையாக இருக்க முடியாது. அந்த வகையில், அவை தொடர்ச்சியாக மாற்றம் செய்யப்படுவதை உறு திப்படுத்தும் வகையில் அமைப்பு சார்ந்த நடைமுறை ஒன்று உருவாக் கப்படும்' என்றும் அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.