ஏமாற்றம் தரும் பட்ஜெட் - தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, March 20, 2023

ஏமாற்றம் தரும் பட்ஜெட் - தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம்

சத்துணவு ஊழியர்களுக்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட்..!

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு ரூபாய் 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் வரவேற்கிறோம்.

அதே நேரத்தில் மாண்புமிகு முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் கூறியவாறு சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளான சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி காலமுறை ஊதியம் வழங்குவது.

குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்குவது.

தற்பொழுது உள்ள ரூபாய் 2000 ஓய்வூதியத்தை மாற்றி குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூபாய் 9000 வழங்குவது. பணி ஓய்வு பெறும் நாளில் ஒட்டுமொத்த தொகையாக சத்துணவு ஊழியர்களுக்கு ரூபாய் 5 லட்சம் வழங்குவது.

எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை உயர்த்தி வழங்குவது.

சத்துணவு திட்டத்தில் 59 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் பற்றி இந்த அறிக்கையில் இடம்பெறாதது, சத்துணவு ஊழியர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியும் அளிக்கிறது என்பதை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில . மையத்தின் மூலம் மாண்புமிகு முதல்வருக்கு தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரத்தில் சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை மாண்புமிக தமிழக முதல்வர் அவர்கள் வருகின்ற சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானிய கோரிக்கையில் அறிவிக்க வலியுறுத்தி, + 03.04.23 அன்று மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒன்றிய அளவில் பெருந்திரள் முறையீடு நடத்தி ஒன்றிய ஆணையர் மூலம் மாண்புமிகு முதல்வருக்கு மகஜர் அனுப்புவது எனவும்.

12.04.23 அன்று மாவட்ட அளவில் பெருந்திரள் முறையீடு நடத்தி மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் மாண்புமிகு தமிழக முதல்வருக்கு மகஜர் அனுப்புவது எனவும்.

19.04,23 அன்று சென்னையில் சத்துணவு ஊழியர்கள் அனைவரும் காத்திருந்து மாண்புமிகு தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மகஜரை வழங்கி சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வென்றெடுப்பது எனவும்,

மாநில செயற்குழுவில் திட்டமிட்டபடி இந்த இயக்கங்களை நடத்துவது என தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில மையத்தின் மூலம் மாண்புமிகு தமிழக முதல்வருக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.