ஆண்டுதோறும் சராசரியாக சுமார் 32 ஆயிரம் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதுவதில்லை - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, March 19, 2023

ஆண்டுதோறும் சராசரியாக சுமார் 32 ஆயிரம் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதுவதில்லை - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்



ஆண்டுதோறும் சராசரியாக சுமார் 32 ஆயிரம் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதுவதில்லை

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்

திருச்சிமார்ச் 19: ஆண்டுதோறும் சராசரியாக 32 ஆயிரம் மாணவர்கள் பொதுத்தேர்வெழுத முன் வருவதில்லை என்றார் தமி ழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 46 ஆவது வார்டு, பொன்மலைமற்றும் கொட்டப்பட்டுபகுதிகளில்மக் களைத் தேடி' குறைதீர் முகாமில் பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களி டம் கூறியதாவது:
இதையும் படிக்க | எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம் பெற்றோர்களுக்கான அழைப்பிதழ் இந்தாண்டு பிளஸ் 2 பொதுத் தேர் வெழுதாத மாணவர்களின் எண்ணிக்கையை வெளிப் படையாக அறிவித்தோம். கரோனா காலகட்டத்தில் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் அனைவருக்கும் முழுத் தேர்ச்சி வழங்கப்பட்டது. மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்ந்து படிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்தாண்டு பொதுத் தேர்வெழுத முன் வராத பல மாண வர்கள் தொழிற்பயிற்சி பள்ளிகளிலும், பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் சேர்ந்து படிப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த கல்வியாண்டில் இடை நிற்றல் எனக் கண்டறியப்பட்ட 1.88 லட்சம் மாணவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களை பள்ளிகளில் பயில ஏற்பாடு செய்யப்பட்டது. ஆண்டுதோறும் சராசரியாக சுமார் 32 ஆயிரம் மாணவர்கள் பொதுத் தேர்வெழுத முன் வருவதில்லை. கடந்த கல்வியாண்டில் அவ்வாறு தேர்வெழுதாத 52 ஆயிரம் மாண வர்களை கடந்த ஜூன் மாதம் தேர்வெழுத வைத்தோம். அதேபோல தற் போது பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களையும் வரும் ஜூன் இறுதி யில் நடத்தப்படவுள்ள உடனடித் தேர்வில் பங்கேற்க வைக்கும் முயற்சி யில் ஈடுபட்டுள்ளோம் என்றார் அமைச்சர்

இதையும் படிக்க | கல்வித்துறையை விளம்பரத் துறையாக மாற்றுவதா?

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.