டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் நோய்களை மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சேர்க்க கோரி முதலமைச்சருக்கு ஆசிரியர் கூட்டணி கடிதம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, February 27, 2023

டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் நோய்களை மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சேர்க்க கோரி முதலமைச்சருக்கு ஆசிரியர் கூட்டணி கடிதம்

டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் நோய்களை மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டுதல் சார்பு- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடிதம்

தமிழகத்தில் பரவலாக டெங்கு உள்ளிட்ட பல்வேறு விதமான வைரஸ் காய்ச்சல் நோய்கள் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுப்பதற்கும், எதிர்கொள்வதற்கும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் நோய்களை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நோய் ஏற்பட்டால் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு ரூ2.50 லட்சம் வரை செலவாகிறது. இந்த சிகிச்சைக்கு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் காப்பீட்டுத் தொகை பெற முடியவில்லை. சிகிச்சைகளுக்கான காப்பீடு தொகை வழங்குவதற்கான அனுமதி இல்லை என கூறப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் நோய் ஏற்பட்டதற்கு பிறகு மேற்கொள்ளும் சிகிச்சைகளுக்கு மருத்துவக் காப்பீடு பெற முடியவில்லை. மருத்துவக் காப்பீடு தொகை பெறுவதற்கான பட்டியலில் இக்காய்ச்சல் தோய் இடம்பெற வேண்டும். அப்போதுதான் உரிய காப்பீட்டுத் தொகையை பெற முடியும். எனவே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் நோய்களை இத்திட்டத்தில் இணைத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக நிதித்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காப்பீடு துறையினருக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.