உபரி ஆசிரியர்கள் வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, February 2, 2023

உபரி ஆசிரியர்கள் வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

உபரி ஆசிரியர்கள் வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு Surplus teachers case High Court order

திருச்சியை சேர்ந்த சில அரசு உதவி பெறும் பள்ளிகளின் நிர்வாகங்கள் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

உதவி பெறும் பள்ளிகளிலுள்ள உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் கலந்தாய்வு மூலம் இடமாறுதல் செய்யப்படுவர் என தமிழக அரசு அறிவித்தது.

இதற்கு முரணாக எங்கள் பள்ளிகளில் பணிபுரியும் சில ஆசிரியர்களை மாற்றுப் பணி அடிப்படையில் மாறுதல் செய்து திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

இதில் ஏற்கனவே உயர்நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை.

முதன்மைக் கல்வி அதிகாரியின் உத்தரவு சட்டவிரோதம். இதில் முடிவெடுக்க அவருக்கு அதிகார வரம்பு இல்லை. அவரது உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டனர்.

நீதிபதி எம்.தண்டபாணி: இதில் தற்போதைய நிலை தொடர வேண்டும். தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலர், இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பி பிப்.,14 க்கு ஒத்திவைக்கப்படுகிறது.

இவ்வாறு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.