ஒன்றிய அரசின் 2023-24 பட்ஜெட் - வருமான வரி அறிவிப்பு குறித்து ஆசிரியர்கள் கருத்து! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, February 2, 2023

ஒன்றிய அரசின் 2023-24 பட்ஜெட் - வருமான வரி அறிவிப்பு குறித்து ஆசிரியர்கள் கருத்து!

ஒன்றிய அரசின் 2023-24 பட்ஜெட் - வருமான வரி அறிவிப்பு குறித்து ஆசிரியர்கள் கருத்து! Union Government's Budget 2023-24 - Editor's Comment on Income Tax Announcement!

ஒன்றிய அரசின் 2023-24 பட்ஜெட் வருமான வரி அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது!

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கருத்து!

ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினர் எதிர்பார்த்த அளவிற்கு வருமானவரி விலக்கு அளிக்கப்படாதது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சுருத்துத் தெரிவித்துள்ளது.

ஒன்றிய அரசின் 2023-24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை:

நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள வருமானவரி தொடபான அறிவிப்புக்கள் எதிர்பார்த்த அளவு பலனைத் தராது என்பதால் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் மாத ஊதியம் பெறுவோர் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. வருமான வரி என்பது மாத ஊதியம் பெறுவோருக்கு மிகப்பெரிய சுமையாக தற்போது மாறிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக வருமான வரி வரம்பு உயர்த்தப்படாததால் மாத ஊதியம் பெறுவோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். வருமானவரி என்பது பெறுகின்ற மாத ஊதியத்தில் ஆண்டுக்கு 1% மாத ஊதியத்தைச் செலுத்தும் அளவுக்கு மாத ஊதியம் பெறுவோரை அவதிக்குள்ளாக்கி வருகிறது. எனவே, 2023-24 ஆம் ஆண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டிலாவது இதற்கு விடிவு காலம் பிறக்கும் என்று நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் மாத ஊதியம் பெறுவோர் பெரிதும் எதிர்பார்த்தனர், ஆனால், ஒன்றிய பட்ஜெட்டில் வருமானவரி தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்புக்கள் பெருத்த ஏமாற்றத்தையே அளித்துள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.