+1 NR 2023 Corrections - மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் 03.02.2023 முதல் 10.02.2023 வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, February 2, 2023

+1 NR 2023 Corrections - மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் 03.02.2023 முதல் 10.02.2023 வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் 03.02.2023 முதல் 10.02.2023 வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு! - 03.02.2023 to 10.02.2023 Name List of Higher Secondary 1st Year Public Examination Students can be revised - Directorate of Government Examinations Notification!

பார்வையில் காணும் இவ்வலுவலக கடிதத்தில், அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் 24.01.2023 பிற்பகல் முதல் பிப்ரவரி முதல் வாரம் வரையிலான நாட்களில் www.dge1.tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று தங்கள் பள்ளிக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்பட்டுள்ள USER ID மற்றும் Password-ஐ பயன்படுத்தி, மார்ச்/ஏப்ரல் 2023 மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்விற்கான தங்கள் பள்ளி மாணாக்கர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறும் அவ்வாறு, பதிவிறக்கம் செய்யப்படும் பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் அத்திருத்தங்களை மேற்கொள்ள பின்னர் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தற்போது, முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும், பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றி மார்ச்/ஏப்ரல் 2023 மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்விற்கான பெயர்ப்பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மார்ச்/ஏப்ரல் 2023 மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்விற்கான தங்கள் பள்ளி மாணாக்கர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் இருப்பின், 03.02.2023 முதல் 10.02.2023 வரையிலான நாட்களில் பள்ளித் தலைமையாசிரியர்கள் EMIS PORTAL லில் Nominal Roll பகுதிக்குச் சென்று அத்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

2. அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் அறிவிக்கப்படும் நாட்களில் EMIS PORTAL லில் மேற்கொண்ட திருத்தங்கள் மட்டுமே DGE PORTALலில் Update செய்ய இயலும் என்பதால், தலைமையாசிரியர்களும் பள்ளித் அனைத்து மேல்நிலைப் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி திருத்தங்கள் மேற்கொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 3. மாணாக்கரின் அனைத்து வகையான திருத்தங்களும் EMIS PORTAL -லில் மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும்.

4. மேற்குறிப்பிட்ட நாட்களில் EMIS PORTAL-லில் மேற்கொண்ட திருத்தங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு, DGE PORTALலில் பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ள பின்னர் வாய்ப்பு வழங்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.