விழிபிதுங்கும் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் - கைக்கு வராத ஜனவரி மாத சம்பளம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, February 2, 2023

விழிபிதுங்கும் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் - கைக்கு வராத ஜனவரி மாத சம்பளம்

விழிபிதுங்கும் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் - கைக்கு வராத ஜனவரி மாத சம்பளம் Vigilant Aided School Teachers - Unpaid January Salary



விழிபிதுங்கும் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் - கைக்கு வராத ஜன.,மாத சம்பளம்

சிவகங்கை மாவட்ட அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஜன.,சம்பளம் வழங்காததால் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இம்மாவட்டத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு 500 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டத்தின் (ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்.,) கீழ் சம்பளம் வழங்கப்படுகிறது. ஜன., சம்பள பில்லை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆன்லைனில் சமர்பித்துள்ளனர். அதில் ஜன.,16 க்கு முன் வரை பில் தாக்கல் செய்த பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டுமே ஜன., சம்பளம் ஆசிரியர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

ஜன., 17 க்கு பின் சம்பள பில் தாக்கல் செய்த ஆசிரியர்களுக்கு 'பட்ஜெட்' இல்லை என்ற வாசகத்தை கூறி, சம்பள பில்லை ஏற்கவில்லை. இதனால் ஜன., 17 க்கு பின் சம்பள பில் தாக்கல் செய்த 50 க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு பிப்., 1 ம் தேதி வரை சம்பளம் வரவு வைக்கவில்லை. ஒவ்வொரு மாதமும் ஆசிரியர்கள், ஆன்லைனில் சம்பள பில்லை ஏற்றுவதற்குள் விழிபிதுங்கி காணப்படுகின்றனர்.

ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., வெப்சைட் முடங்கி விடுவதால் சென்னையில் உள்ள தொடக்க கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு புகார் செய்ய வேண்டியுள்ளது. ஜனவரி சம்பளத்தை பெற முடியாத ஆசிரியர்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.கல்வித்துறை நிர்வாகம் விடுபட்ட அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.