NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, January 24, 2023

NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! Joint Director of School Education orders to link Aadhaar number with bank account number of students who have cleared NMMS exam!

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின்(நாட்டுநலப் பணித்திட்டம்) செயல்முறைகள், சென்னை - 6

பொருள்:

ந.க.எண்.004210/எம்/இ4/2022 நாள்.18.01.2023 பள்ளிக் கல்வி - திட்ட ஆண்டு 2022-23 உதவித்தொகை திட்டம் - தேசிய வருவாய் வழிதிறன் தேர்வு (National மத்திய அரசின் Means - cum- Merit Scholarship Scheme) தேர்ச்சி பெற்ற மாணவ / மாணவியரின் விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் மற்றும் புதுப்பித்தல் - மாணவர்கள் வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தல் - சார்பு.

பார்வை:

1. மத்திய கல்வித் துறை, சாஸ்த்திரி பவன், புதுடில்லி, கடிதம் F.No.17- 1/2022-SS, நாள்:13.01.2023.

2.தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (நா.ந.ப.தி) செயல்முறைகள், ந.க. எண்: 004210/எம்/இ4/2022, நாள்: 07.10.2022, 17.11.2022, 21.11.2022 Lomb 25.11.2022.

பார்வை 2-இல் காணும் செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி NMMSS தேர்வில் தேர்ச்சி பெற்று, 2022-23 கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு புதிதாக விண்ணப்பிக்குமாறும், மேலும், 10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் முந்தைய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை (Renewal application) புதுப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பங்கள் புதியதாகவோ புதுப்பித்தல் செய்யவோ National Scholarship Portal என்ற இணையதளத்தில் மட்டுமே மேற்கொள்ளப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டு 10.01.2023 அன்றுடன் பணிகள் முடிக்கப்பட்டது. மேலும், பார்வை 1 இல் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு விவரத்தினை புதுடில்லி, மத்திய கல்வித் துறைக்கு உரிய காலத்திற்குள் அளித்திட மாணவர்களுக்கு உரிய தொகை வங்கிக் கணக்கில் சென்றடைய ஏதுவாக மாணவர்களது ஆதார் எண்களை வங்கிக் கணக்குடன் இணைத்திட பள்ளித் தலைமையாசிரியர் மூலம் மாணவர்களை அறிவுறுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

" அவரசம் மிக முக்கியம் "

இணைப்பு: பார்வையில் கானும் கடித நகல்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.