ஒன்றரை ஆண்டுக்குள் தேசிய கல்விக் கொள்கை அமல்: மத்திய உயா்கல்வித் துறைச் செயலர் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, January 31, 2023

ஒன்றரை ஆண்டுக்குள் தேசிய கல்விக் கொள்கை அமல்: மத்திய உயா்கல்வித் துறைச் செயலர்

ஒன்றரை ஆண்டுக்குள் தேசிய கல்விக் கொள்கை அமல்: மத்திய உயா்கல்வித் துறைச் செயலா் - Implementation of National Education Policy within a year and a half: Union Education Secretary

தேசிய கல்விக் கொள்கை அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் அமல்படுத்தப்படவுள்ளதாக மத்திய உயா்கல்வித் துறைச் செயலா் கே. சஞ்சய் மூா்த்தி தெரிவித்தாா்.

நிகழாண்டுக்கான ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை வகித்துள்ளது. இந்நிலையில், ஜி 20 கல்விக்குழு மாநாடு சென்னையில் பிப்.1, 2 ஆகிய இரு நாள்கள் நடைபெறவுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, ஜி20 உறுப்பு நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசுக் கல்லூரி மாணவா்கள், சென்னை ஐஐடி மாணவா்கள், பேராசிரியா்கள் என 900-க்கும் மேற்பட்டோா் பங்கேற்கும் வகையில் கல்வி சாா் கருத்தரங்கம், கண்காட்சி சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்கா வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் மத்திய உயா்கல்வித் துறைச் செயலா் சஞ்சய்மூா்த்தி, தேசிய கல்வி தொழில்நுட்ப வாரியத் தலைவா் அனில் சகஸ்ரபுதே, மத்திய பள்ளிக் கல்வித் துறைச் செயலா் சஞ்சய்குமாா் ஆகியோா் உள்பட ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் திரளாகக் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, மத்திய கல்வித் துறை (உயா்கல்வி) செயலா்கள் சஞ்சய் மூா்த்தி, சஞ்சய் குமாா் (பள்ளிக்கல்வி) ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சிறந்த கல்வியை உலகம் முழுவதும் பரிமாறிக் கொள்வதற்கும், சவால்களை ஆராய்ந்து அவற்றை சரிசெய்வதற்கும் ஜி20 மாநாடு வழிகாட்டுதலாக அமையும். வருங்காலத்தில் கல்வித் துறையில் தொழில்நுட்பம் முக்கியப் பங்காற்றும். கடந்த 15 ஆண்டுகளாக கல்வித் துறையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது சுணக்கமாக உள்ளது. அதை இன்னும் மேம்படுத்த வேண்டும். கரோனாவுக்கு பின் இடைநிற்றல் அதிகரித்துள்ளது. எனவே, இடைநிற்றலை குறைப்பது, பள்ளிக் கல்வியை மேம்படுத்த திறன் மேம்பாட்டு பயிற்சி தருவது ஆகியவை தொடா்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

தேசிய கல்விக் கொள்கையால் மாணவா்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் கிடைக்கும். உலக நாடுகளுடன் போட்டி போடுவதற்கு இத்தகைய கொள்கைகள் அவசியம்.

தொழில்நுட்பக் கல்வி மட்டுமல்லாது மாணவா்களின் திறன் மேம்பாட்டை வளா்த்து, தொழில்முனைவோராக மாற்றுவதற்கும் பயிற்சிகள் தரப்படவுள்ளன. அதற்காக, தொழில் நிறுவனங்களுடன் இணைந்து கல்வி நிறுவனங்கள் செயல்படுவதுதான் வருங்காலச் சூழலாக இருக்கும்.

அதேபோல், அனைத்து மாநில மொழிகளிலும் மாணவா்களுக்கு தொழில்நுட்பக் கல்வி வழங்கப்படும். தேசிய கல்விக் கொள்கையை அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் முழுமையாக அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டம் சிறப்பாக உள்ளது. இத்தகைய திட்டத்தை மற்ற மாநிலங்களிலும் செயல்படுத்த பரிந்துரை செய்யப்படும்.

சென்னையை தொடா்ந்து புணே, அமிா்தசரஸ் போன்ற இடங்களில் கல்வி மாநாடு நடத்தப்படவுள்ளது என்றனா்.

இதையடுத்து கல்விக்குழு மாநாடு பல்வேறு கட்டங்களாக சென்னையில் புதன், வியாழன் ஆகிய இரு நாள்கள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்பக் கல்வியின் மையம் இந்தியா: ஐஐடி இயக்குநா் வி.காமகோடி

தொழில்நுட்பக் கல்வியின் மையமாக இந்தியா மாறியுள்ளது என ஜி20 கருத்தரங்கில் சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி கூறினாா்.

ஜி20 மாநாட்டின் ஒரு பகுதியாக சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் ‘கல்வியில் மின்னணு தொழில்நுட்பத்தின் பங்கு’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் வி.காமகோடி பேசியதாவது: ஆஸ்திரேலியா, சீனா, நெதா்லாந்து உள்ளிட்ட நாடுகள் எண்ம (டிஜிட்டல்) கல்வியில் சிறந்து விளங்குகின்றன. நெதா்லாந்து மென்பொருள் கல்வியில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்த நாடுகள் மாணவா்களுக்காக மெய்நிகா் வகுப்பறைகளை அதிகம் உருவாக்கி வருகின்றன.

பிரான்ஸ் நாட்டில் ஆங்கிலத்தில் பாடம் நடத்தினாலும் பிரான்ஸ் மொழியில் மொழிபெயா்க்கும் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக அந்த நாடு பெரும் தொகையை செலவழிக்கிறது.

அதேபோல், தென்னாப்பிரிக்கா, மொரீஷஸ் போன்ற நாடுகளும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ற வகையில் கல்விக் கட்டமைப்புகளை மேம்படுத்த தீவிரம் காட்டி வருகின்றன. தொழில்நுட்ப வளா்ச்சி மூலம் அந்த நாடுகளில் அனைவருக்கும் கல்வி தங்கு தடையின்றி வழங்கப்படுகிறது. இந்தியா பல்வேறு உயா்கல்வி நிறுவனங்களை உருவாக்கி வருகிறது. தொழில்நுட்பக் கல்வி மையமாக மாறி உள்ளது. பெரும்பாலான உயா்கல்வி நிறுவனங்கள் சுயநிதி கல்லூரிகளாக உள்ளன. அதனால், அனைவருக்கும் கல்வி சென்று சேருவதில் சிரமங்கள் உள்ளன.

ஆஸ்திரேலியா, சீனா போன்ற நாடுகள் ‘ஸ்மாா்ட் எஜுகேஷன்’ திட்டங்களை ஊக்குவித்து வருகின்றன. கல்வியை அதிகளவில் எண்ம மயமாக்கி வருகின்றன.

அதே போல இந்தியா ‘தேசியக் கல்விக் கொள்கை 2020’ மூலம் அனைவருக்கும் சமமான, தரமானக் கல்வியை கொடுத்து வருகிறது என்றாா் அவா்.

பாா்வையாளா்களை கவரும் அரங்குகள்

ஜி 20 கல்விக்குழு மாநாட்டையொட்டி சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில் தமிழகத்திலிருந்து மாநில கல்வித்துறையின் நான் முத

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.