அரசுப் பள்ளி ஆசிரியை தலையில் கான்கிரீட் சுவர் இடிந்து விழுந்து காயம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, January 20, 2023

அரசுப் பள்ளி ஆசிரியை தலையில் கான்கிரீட் சுவர் இடிந்து விழுந்து காயம்



ஆசிரியை தலையில் கான்கிரீட் சுவர் இடிந்து விழுந்து காயம் Government school teacher injured on head after concrete wall collapsed

திருச்செந்தூர்:திருச்செந்தூர் அருகே கீழநாலுமூலைக்கிணறு ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்திலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியின் கான்கிரீட் சுவர் இடிந்து ஆசிரியை தலையில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள கீழநாலுமூலைக்கிணறு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள். இப்பள்ளியில் அரசு சார்பில் 6 ஆசிரியர்களும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் 3 ஆசிரியர்களும் பணி செய்து வருகிறார்கள். இந்த பள்ளி வளாகத்தில் இருக்கக்கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் இந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டுவருகிறது.

இந்தநிலையில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றுவரக்கூடிய நிலையில் இங்கு இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் மட்டுமே உள்ளதால் பள்ளி வளாகத்தில் உள்ள மேல்நிலை குடிநீர்த்தொட்டி அருகிலும், மரத்தடியின் கீழும் அமர்ந்தும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்திவருகிறார்கள். இந்தநிலையில் இன்று காலை வழக்கம்போல பெற்றோர் ஆசிரியர் சங்கத்தால் நியமிக்கப்பட்ட ஆசிரியை சத்யா பள்ளி வளாகத்தில் பாடம் நடத்திக்கொண்டிருந்த போது அருகிலிருந்த 50 அடி உயர மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியின் கான்கிரீட் சுவர் இடிந்து ஆசிரியை சத்யா தலையில் விழுந்துள்ளது. இதில் தலையில் காயமடைந்த ஆசிரியை சத்தியாவை பள்ளி தலைமை ஆசிரியை இந்திராணி உள்ளிட்ட ஆசிரியர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் குடிநீர் தொட்டி சில மாதங்களாக பழுதடைந்து உள்ளதால் பெரும் அசம்பாவிதத்தை தவிர்க்கும் விதமாக குடிநீர் தொட்டியை பள்ளி வளாகத்த்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டுமென நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்துவந்துள்ளனர்.

பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்திலும் இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்னர். ஆனால் இதுவரை மேலத்திருச்செந்தூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் எந்தவிதமாக நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி பெற்றோர்கர்களும் ஆசிரியர்களும் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் உள்ளதால் மிகப்பெரிய அசம்பாவிதம் நடைபெறும் முன் ஊராட்சி நிர்வாகம் குடிநீர் தொட்டியை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.