அதிகாரிகளுக்கு வெளிநாடு சுற்றுலா - CEOக்கள் கூட்டத்தில் அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, January 29, 2023

அதிகாரிகளுக்கு வெளிநாடு சுற்றுலா - CEOக்கள் கூட்டத்தில் அறிவிப்பு

அதிகாரிகளுக்கு வெளிநாடு சுற்றுலா சி.இ.ஓ.,க்கள் கூட்டத்தில் அறிவிப்பு

பள்ளிக்கல்வி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் கல்வி அதிகாரிகள், வெளிநாடு சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்படுவர் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும், முதன்மைக் கல்வி அலுவலர்களான சி.இ.ஓ.,க்கள், மாவட்ட கல்வி அலுவலர்களான டி.இ.ஓ.,க்கள் உள்ளிட்டோருக்கான, மூன்று நாள் ஆலோசனைக் கூட்டம், மாமல்லபுரத்தில் நேற்று துவங்கியது.

நேற்றைய கூட்டத்தில், பள்ளிக்கல்வி முதன்மைச் செயலர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வி கமிஷனர் நந்தகுமார், தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவொளி ஆகியோர், பள்ளிக்கல்வி திட்டங்களின் செயல்பாட்டு நிலை குறித்து, மாவட்ட வாரியாக கேட்டறிந்தனர். சிறப்பாக செயல்பட்ட கல்வி அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பின்தங்கிய செயல்பாடுகள் உள்ள மாவட்ட அதிகாரிகளிடம் அதற்கான காரணங்கள் குறித்து, விளக்கம் கேட்கப்பட்டது.

வரும் மாதங்களில், அனைத்து மாவட்டங்களிலும், 'இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், வானவில் மன்றம், நம்ம ஸ்கூல், நான் முதல்வன், பசுமைப்பள்ளி' உள்ளிட்ட, அரசின் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என, கண்டிப்புடன் அறிவுறுத்தப்பட்டது.

பள்ளிக்கல்வித் துறையின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாவட்டத்தைச் சேர்ந்த முதன்மைச் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களை, பள்ளி மாணவர்களுடன் சேர்த்து, வெளிநாடு சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல உள்ளதாக, கமிஷனர் நந்தகுமார் அறிவித்தார்.

பள்ளிக்கல்வித் துறையின் அடுத்த கட்ட செயல்பாடுகள் மற்றும் அடுத்த கல்வி ஆண்டுக்கான செயல் திட்டங்கள் குறித்து, இன்றும், நாளையும் விவாதிக்கப்பட உள்ளது.

நாளைய நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் பங்கேற்க உள்ளார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.