வருமான வரியே வசூலிக்காத நாடுகள்..பொருளாதார வளர்ச்சிக்கு வேறு என்ன வழி? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, January 26, 2023

வருமான வரியே வசூலிக்காத நாடுகள்..பொருளாதார வளர்ச்சிக்கு வேறு என்ன வழி?

Countries that do not collect income tax..what other way to economic development?
வருமான வரியே வசூலிக்காத நாடுகள்..பொருளாதார வளர்ச்சிக்கு வேறு என்ன வழி?

Union Budget 2023 : 2023 பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பைப் பற்றி அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும் நிலையில் வருமான வரி விதிக்கப்படாத நாடுகள் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் வரும் பிப்ரவரி 1 ஆம் நாள் நடைபெறவுள்ளது. அதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இந்த ஆண்டு பட்ஜெட்டில் மாத ஊதியம் பெறுவோர், வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்வை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்தியாவில் விதிக்கப்படும் நேரடி வரிகள் குறைவா? அதிகமா?

இந்தியாவில் விதிக்கப்படும் நேரடி வரிகள் அமெரிக்கா, கனடா, சீனா போன்ற வளர்ந்த நாடுகளை விடக் குறைவாகவும், பிரேசில், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் போன்ற வளரும் நாடுகளை ஒப்பிடும் போது சற்று அதிகமாகவும் வருமான வரி வசூலிக்கப்படுகிறது

இதனால் இந்தியாவில் வசூலிக்கப்படும் நேரடி வரிகளை மிகக் குறைவு என்றும் சொல்ல முடியாது, மிக அதிகம் என்றும் கூறமுடியாது. இரண்டுக்கும் இடைப்பட்டது என்று சொல்லலாம். உலகில் வருமான வரியே வசூலிக்காத நாடுகளும் உள்ளது.

இந்த நிலையில், புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்த உடனே, மாத சம்பள தாரர்களின் புலம்பலைப் பல இடங்களில் கேட்க முடிகிறது. அடுத்த 3 மாதங்களுக்குச் சம்பளத்தில் கணிசமான பகுதி வருமான வரியாக பிடித்தம் செய்யப்படுவதால், பலருடைய குடும்ப பட்ஜெட் காஸ்ட் கட்டிங் நடைமுறையைத் தொடங்கிவிட்டனர். வருமான வரி விலக்கு மேல் மாத சம்பளகார்கள் இவ்வளவு எதிர்பார்ப்புகள் வைத்திருக்கும் போது, உலகில் சில நாடுகளில் வருமான வரியே கிடையாது என்று சொன்னால் பல பேருக்கு ஆச்சிரியகமாக தான் இருக்கும். அவற்றைப் பற்றிப் பார்ப்போம். ஐக்கிய அரபு அமீரகம்:

எண்ணெய் வளம் நிறைந்த ஐக்கிய அரபு நாடு சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கப்பூமியாக திகழ்கிறது. இந்த நாட்டில் தான் உலகின் அதி நவீன தொழில் நுட்பங்கள் முதல் முதலில் சந்தை படுத்தப்படுகிறது. மிக உயர்ந்த வாழ்க்கைத் தரம் கொண்ட நாடாகக் கருதப்படும் ஐக்கிய அமீரகம் தனி நபர்களிடம் இருந்து வருமான வரி வசூலிப்பதில்லை. அதே நேரம் எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்தும் வெளிநாட்டு வங்கிகளிடம் இருந்தும் கார்ப்பரேட் வரியை வசூலிக்கின்றானது.

பஹாமஸ்:

சுற்றுலாப் பயணிகளின் மிகவும் விரும்பும் நாடு எதுவென்றால் அது பஹாமாஸ் தான். சுற்றுலாத் துறை வாயிலாக வலுவான பொருளாதாரத்தைக் கொண்ட இந்த நாடு உலகப் பணக்கார நாடுகளில் ஒன்றாகும். பஹாமாஸ் வாழ் குடிமக்கள் தனி நபர் வருமானத்திற்கோ, பரம்பரை, பரிசுகள் அல்லது மூலதன ஆதாயங்கள் மூலம் வரும் செல்வத்திற்கும் எந்த விதமான வரியையும் செலுத்த வேண்டியது இல்லை.

மொனாக்கோ:

அதே போல மிகக் குட்டி நாடான மொனாக்கோவும் எந்த விதமான மூலதன வரிகளை விதிப்பது இல்லை. வாழ்வதற்குக் கொஞ்சம் விலையுயர்ந்த நாடாக மொனாக்கோ கருதப்பட்டாலும் இங்குக் குற்றங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. கத்தார்:

அரபு நாடுகளின் ஒன்றான கத்தார், தனி நபர் வருவாய்க்கு எந்த விதமான வரிகளும் விதிப்பது இல்லை. ஆனால் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் கட்டாயம் 15% வரியைச் செலுத்த வேண்டும். இங்கு இருக்கும் வாழ்க்கைத் தரத்தின் காரணமாக கத்தார் வெளிநாட்டவர்களால் நேசிக்கப்படும் நகரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

குவைத்:

யாராக இருந்தாலும், எந்த நாட்டின் குடிமகனாக இருந்தாலும் குவைத்தை பொருத்த வரைக்கும் தனி நபர் வருமான வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால் கத்தாரைப் போலவே குவைத்திலும் கார்பரேட் நிறுவனங்கள் 10% வரி செலுத்த வேண்டும்.

பனாமா:

பணக்காரர்களின் சொர்க்கப்பூமியாக கருதப்படும் தேசம் பனாமா. ஏனெனில் இங்கு இருக்கும் இலகுவான சட்டங்கள், செல்வந்தர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தனி நபர் வருமான வரி இங்கு இல்லை என்பதை விட, வெளிநாடுகளில் இயங்கும் நிறுவனங்கள், பனாமாவில் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டால் எந்த விதமான வரிகளும் கிடையாது. ஆனால் உள்ளூரில் தொழில் புரிந்தால், கணிசமான வரிகளைச் செலுத்த வேண்டியிருக்கும்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.