இரண்டாம் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டுத் தேர்வு (Summative Assessment) / தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு தேர்வு (CCE) 19.12.2022 முதல் 23:12.2022 வரை நடத்துதல் - சார்பாக - மாவட்டக்கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, December 14, 2022

இரண்டாம் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டுத் தேர்வு (Summative Assessment) / தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு தேர்வு (CCE) 19.12.2022 முதல் 23:12.2022 வரை நடத்துதல் - சார்பாக - மாவட்டக்கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள்

திருச்சிராப்பள்ளி மாவட்டக்கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள்

பொருள்:

நக.எண்.1000/ஆ5/2022. நாள். 14.12.2022

தொடக்கக்கல்வி - திருச்சிராப்பள்ளி கல்வி மாவட்டம் 2022-2023ஆம் கல்வியாண்டிற்கு 5 ஆம் வகுப்பு மற்றும் 6-8ஆம் வகுப்பு 4. மாணவர்களுக்கு இரண்டாம் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டுத் தேர்வு (Summative Assessment) / தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு தேர்வு (CCE) 19.12.2022 முதல் 23:12.2022 வரை நடத்துதல் - சார்பாக.

பார்வை:

சென்னை, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அவர்களின் நக.எண்.2411/ஈ2/2020. நாள்:14:12.2022.

பார்வையில் காணும் தகலின்படி, திருச்சிராப்பள்ளி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி / அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 4 - 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன மதிப்பீட்டுப் புலத்தின் வழியாக உருவாக்கி வழங்கப்படும் தொகுத்தறி மதிப்பீடு (Summative Assessment) வினாத்தாள்களை வகுப்பு ஆசிரியரின் விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே (Optional) பயன்படுத்தி பருவத் தேர்வினை நடத்திக் கொள்ளவும், ஆசிரியர் விரும்பும் பட்சத்தில் பள்ளியளவில் உருவாக்கிய வினாத்தாளைக் கொண்டும் பருவத் தேர்வை நடத்திக் கொள்ளவும் தெரிவிக்கப்படுகிறது.

6-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு தேர்வு (CCE) ஒன்றிய அளவில் தயாரிக்கப்படும் வினாத்தாட்கள் அல்லது பள்ளி அளவில் தயாரிக்கப்படும் வினாத்தாட்களைக் கொண்டு கீழ்க்கண்ட அட்டவணைப்படி தேர்வினை நடத்திக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

1) 6 முதல் 8 வகுப்புகளுக்கு 2.00 மணிநேரம் தேர்வுகள் நடைபெற வேண்டும்.

2) 4 மற்றும் 5 வகுப்புகளுக்கு 1.30 மணிநேரம் தேர்வுகள் நடைபெற வேண்டும்.

3) 4,6 மற்றும் 8 வகுப்புகளுக்கு முற்பகலும், 5 மற்றும் 7 வகுப்புகளுக்கு பிற்பகலும் தேர்வுகள் நடைபெற வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.