NMMS 2023 - Exam Date And Notification Published - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, December 23, 2022

NMMS 2023 - Exam Date And Notification Published

2022-23ம் வருடத்தின் NMMS தேர்வு அறிவிப்பு: தேர்வு நாள்:25.02.2023

NMMS தேர்வு 25/02/ 2023 சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது

2022-2023 - ம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் , 2023 பிப்ரவரி மாதம் 25 - ஆம் தேதி ( சனிக்கிழமை ) அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத் தேர்விற்கு ( NMMS ) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்புதவித்தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது . உதவித் தொகை வழங்க மாணவர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு NMMS தேர்வு அனைத்து வட்டார அளவில் ( Block Level ) தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 25.02.2023 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறவுள்ளது . இத்தேர்விற்கான விண்ணப்பங்களை 26.12.2022 முதல் 20.01.2023 வரை இத்துறையின் https://dge1.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் ( Download ) செய்து கொள்ளலாம் . பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ .50 / சேர்த்து , தாம் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 24.01.2023 . மேலும் , https://dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களை அறியலாம்.

NMMS PRESS RELEASE - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.