பி.ஆர்க்., படிக்கும் வாய்ப்பு அரசு பள்ளி மாணவர்கள் இழப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, October 6, 2022

பி.ஆர்க்., படிக்கும் வாய்ப்பு அரசு பள்ளி மாணவர்கள் இழப்பு

பி.ஆர்க்., படிக்கும் வாய்ப்பு அரசு பள்ளி மாணவர்கள் இழப்பு

நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறாததால், பி.ஆர்க்., படிக்க, அரசு பள்ளி மாணவர்கள் தகுதி பெறவில்லை.

அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படித்து, தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், கட்டண சலுகையுடன் உயர் கல்வியில் சேர்க்கை வழங்கப்படுகிறது. அதன்படி, பி.ஆர்க்., என்ற கட்டடக் கலையியல் படிப்புக்கு, 38 கல்லுாரிகளில், 1,609 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

இதில், அரசின், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், 120 இடங்கள் உள்ளன. இந்த ஒதுக்கீட்டில் சேர்வதற்கு, நடப்பு கல்வி ஆண்டில், அரசு பள்ளியை சேர்ந்த, 78 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்தனர். அதில், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுக்கான பிரிவில் மட்டும், ஒரு மாணவர் தகுதி பெற்றுள்ளார்.

மற்றவர்கள் பி.ஆர்க்., படிப்பில் சேர்வதற்கான, 'நாட்டா' அல்லது ஜே.இ.இ., நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இதனால், அரசு பள்ளி மாணவர்களுக்கான, 119 இடங்கள் பொது பிரிவுக்கு மாற்றப்பட உள்ளன.இது, பள்ளிக் கல்வி அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

அரசின் சார்பில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகை வழங்கியும், அரசு பள்ளி மாணவர்கள், நுழைவு தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி கூட பெறவில்லையே என, கல்வியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஆளும் கட்சியான தி.மு.க.,வும், தமிழக அரசும் மருத்துவ படிப்புக்கான 'நீட்' நுழைவு தேர்வை எதிர்த்து வரும் நிலையில், மற்ற நுழைவு தேர்வுகளிலும், அரசு பள்ளி மாணவர்கள் ஆர்வம் காட்டாத நிலை உள்ளது.

அரசு பள்ளிகளில் நுழைவு தேர்வுகள் மற்றும் உயர் கல்வி குறித்த விழிப்புணர்வு இல்லாததால், 119 இடங்கள் மாணவர்கள் இல்லாமல், சம்பந்தப்பட்ட கல்லுாரிகளிடம் திரும்ப ஒப்படைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, வரும் காலங்களிலாவது, அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி, அவர்களுக்கான உயர் கல்வி வாய்ப்புகள் குறித்தும், நுழைவு தேர்வுகளின் முக்கியத்துவம் குறித்தும், தமிழக பள்ளிக் கல்வித் துறை உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

1,607 பேர் தகுதி

பி.ஆர்க்., படிக்க நடப்பு கல்வி ஆண்டில், 2,491 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில், 78 அரசு பள்ளி மாணவர்கள் தவிர, 2,413 பேர் தனியார் பள்ளிகளில் படித்தவர்கள். இவர்களில், 1,606 பேரும், அரசு பள்ளி மாணவர் ஒருவர் என, 1,607 பேர் மட்டுமே, பி.ஆர்க்., கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.தனியார் பள்ளி மாணவர்களில் விண்ணப்பம் நிராகரிக்கப் பட்ட, 807 பேரில், 10 பேரை தவிர மற்றவர்கள், 'நாட்டா' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.