8ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. ரூ.50,000 வரை சம்பளம்.. ஊராட்சி ஓன்றியத்தில் வேலைவாய்ப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, October 6, 2022

8ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. ரூ.50,000 வரை சம்பளம்.. ஊராட்சி ஓன்றியத்தில் வேலைவாய்ப்பு

8ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. ரூ.50,000 வரை சம்பளம்.. ஊராட்சி ஓன்றியத்தில் வேலைவாய்ப்பு

திண்டுக்கல்மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான ஆள் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடங்கள் விவரம்:

கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் - அலுவலக உதவியாளர் (4)

குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் - அலுவலக உதவியாளர்(3) மற்றும் இரவுக்காவலர் (1)

வடமதுரை ஊராட்சி ஒன்றியத்தில்- இரவுக்காவலர் (1)

வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் - அலுவலக உதவியாளர் (3)

தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் - அலுவலக உதவியாளர் (2) மற்றும் இரவுக்காவலர்(1)

ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் - அலுவலக உதவியாளர் (2)

அலுவலக உதவியாளர் கல்வித்தகுதி:: 8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; மிதிவண்டி ஊட்ட தெரிந்தவராக இருக்க வேண்டும்.

இரவுக் காவலர் பணிக்கு எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

ஊதியம்:

1) அலுவலக உதவியாளர் : ரூ.15,700/- (15700-50000)

2) இரவுக்காவலர் : ரூ.15,700/- (15700/- 50000)

விண்ணாப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.

இனசுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

ஒவ்வொரு பணியிடத்திற்கும் தகுதியின் அடிப்படையில் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் காலி பணியிடம் அறிவிக்கப்பட்ட மாவட்டத்திற்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.

அரசு விதிகளின்படி இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.

சுயமுகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ரூ.30/- ஒட்டப்பட்ட அஞ்சல் உறை -1 (10x4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 14.10.2022 பிற்பகல் 5.45 மணிக்குள் ஆணையாளர், தொடர்புடைய ஊராட்சி ஒன்றியம் முகவரிக்கு நேரிலோ, அல்லது தபால் மூலமோ அனுப்ப வேண்டும். காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் (Call letter) அனுப்பி வைக்கப்படும்.

காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் தேசிய தொழில் நெறி வழிகாட்டு மைய இணையதள (National Career Service Portal) www.ncs.gov.in மற்றும் மாவட்ட இணையதள dindigul.nic.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.