அரசு ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, October 15, 2022

அரசு ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு!

அரசு ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு!

புதுச்சேரி அரசு ஓய்வூதியதாரர்களுக்கான குடும்ப ஓய்வூதியத்தை 4 சதவீதம் அறிவிக்கப்பட்டது.

கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து 4 சதவீத அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து முன் தேதியிட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசு ஊழியா்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் அகவிலைப்படி உயா்த்தப்பட்டதையடுத்து, புதுச்சேரியிலும் அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படி உயா்வு செயல்பாட்டுக்கு வந்தது. அதன்படி, புதுச்சேரி அரசு ஊழியா்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயா்வு அறிவித்து கடந்த 8 ஆம் தேதி புதுச்சேரி அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், புதுச்சேரி அரசு ஓய்வூதியதாரர்களுக்கான குடும்ப ஓய்வூதியத்தை 4 சதவீதம் அகவிலைப்படி உயா்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

34 சதவீதமாக உள்ள ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி, தற்போது 4 சதவீதம் உயா்த்தப்பட்டதையடுத்து, 38 சதவீதமானது. இதற்கான உத்தரவை புதுவை அரசின் நிதித் துறை சாா்புச் செயலா் அா்ஜுன் ராமகிருஷ்ணன் பிறப்பித்தாா்.

இந்த அகவிலைப்படி உயா்வானது கடந்த ஜூலை 1-ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. இதுதொடா்பான உத்தரவு அரசு, அரசு சாா்புத் துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையாகவும் அனுப்பிவைக்கப்பட்டது.

அதன்படி புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதி நிா்வாகத் தலைமை அதிகாரிகளுக்கும் அகவிலைப்படி உயா்வு குறித்த விவரம் அனுப்பிவைக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.