‘பள்ளிக் கல்வித்துறையில் மீண்டும் இயக்குனர்' ஆசிரியர்கள் குரலை எதிரொலித்த லியோனி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, September 5, 2022

‘பள்ளிக் கல்வித்துறையில் மீண்டும் இயக்குனர்' ஆசிரியர்கள் குரலை எதிரொலித்த லியோனி

தமிழக பள்ளிக்கல்வித்துறை ண்ட காலமாக இயக்குனர்கள் கட் ஒப்பாட்டில் இயங்கி வந்தது. கடந்த அதிமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறைக்கு புதிதாக கமிஷனர் பதவி ருவாக்கப்பட்டு, அதில் ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்ப ட்டார். முதல் கமிஷனராக சிஜி தாமஸ் வைத்தியன் நியமிக்கப்ப ட்டார். இருந்தாலும் முக்கிய முடிவுகள் எல்லாவற்றையும் இயக்குனர்களே எடுத்தனர். இதனால் கமிஷனர் பதவி தேவையில்லாத ஒன்றாக பார்க்கப்பட்டது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பள்ளிக்கல்வித்துறையில் கமிஷன ருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட் டது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நடந்த ஐஏஎஸ் இடமாற்றத்தில் நந்தகுமார் கமிஷனராக நியமிக்கப்ப ட்டார். நீண்ட காலமாக இருந்து வந்த இயக்குனர் பதவிக்கு முடிவுரை எழுதப்பட்டது.

இயக்குனர் என்பவர் கல்வித்து றையில் நீண்டகாலம் பணியாற்றி அனுபவம் பெற்றவர்கள் என்பதால், தங்களது கோரிக்கைகள் எளிதில் புரியும், எனவே மீண்டும் இயக்கு னர் பதவியை கொண்டுவர வேண் டும் என்று, கடந்த ஓர் ஆண்டாக ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

இது முதல்வர் ஸ்டாலின் கவ னத்துக்கும் கொண்டு செல்லப்பட் டது. ஆனால் ஐஏஎஸ் அதிகாரிதான் இருக்க வேண்டும் என்பதில் உயர் அதிகாரிகள் உறுதியாக இருக்கின்ற னர். இந்நிலையில் ஆசிரியர்கள் தினமான நேற்று, ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா சென்னை கலை வானர் அரங்கில் நேற்று நடந்தது. விழாவில் தமிழக பாடநூல் கழகத் தலைவர் லியோனி பேசுகையில்,
“இந்த விழா மேடையில் கல்வித் துறை செயலர் காகர்லா உஷா, கமி ஷனர் நந்தகுமார், இணை இயக்கு னர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் எல்லாரும் இருக்கிறார்கள். பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்துக்கு வரும் ஆசிரியர்கள், கமிஷனரை பார்க்க முடியாவிட்டால், என்னைத்தான் வந்து சந்திப்பார்கள். கமிஷனரை *சந்திக்கமுடிய வில்லை என்பதால் அவர்களது குறைகளை என்னிடம் சொல்வா கள். ஆசியர்களுக்கு நிறைய எழுத்து வேலை தருகிறார்கள். கிளார்க் வேலையை விட்டுவிட்டு, பாடம் நடத்தும் வேலையை அதிகமாக கொடுத்தால் ஆசிரியர்கள் மகி ழ்ச் சியாக இருப்பார்கள். நான் 33 ஆண்டு ஆசிரியராக பணி செய்ததால், அவர் களது கஷ்டத்தை உணர்ந்து நான் இதை கோரி க்கையாக வைக்கிறேன். புள்ளி விவர ங்கள் சேகரிக்கும் பணி யில் இருந்தும் ஆசிரியர்களை விடு விக்க வேண்டும்.

இன்னும் ஒரு முக்கியமான கோரிக்கை.

முன்பெல்லாம் பள்ளிக் கல்வி இயக்குனர் என்ற அருமையான ஒரு பொறுப்பு இருந்தது. பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் என்ற பொறுப்பை மீண்டும் கொண்டு வர வேண்டும். இதன் மூலம் பள்ளிக் கல்வித்துறை நன்றாக செயல்படும். கமிஷனரும் இருக்கட்டும். அவர் இருக்கும்போதே அந்த இயக்குனர் *பொறுப்பை கொண்டு வர வேண் டும் என்ற கோரிக்கையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வாயிலாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்" என்றார். இதை சற்றும் எதிர்பார்க்காத பள்ளிக்கல் வித்துறை செயலர் காகர்லா உஷா வும், கமிஷனர் நந்தகுமாரும் விழா மேடையில் நீண்ட நேரம் ஆலோ சனை செய்தனர். இது பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது.

அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி பேசுகையில், "லியோனி 2 கருத்துக்களை இங்கு கூறினார். அவரது கருத்துகள் முதல்வரின் கவ னத்துக்கு கொண்டு செல்ல வேண் டியது எனது கடமை. ஆசிரியர்க ளுக்கு தேவை சுதந்திரம்"என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.