நாளை (07.09.22) இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, September 6, 2022

நாளை (07.09.22) இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

நாளை (07.09.22) திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

உள்ளூர் விடுமுறை - திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா 07.09.2022 (புதன் கிழமை) அன்று நடைபெறுவதை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வெளியிடப்படுகிறது.



ஆணை:

பார்வை மூன்றில் படிக்கப்பட்ட திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் 04.09.2022 ஆம் நாளிட்ட கடிதத்தில் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா 07.09.2022 (புதன் கிழமை) அன்று நடைபெறுவதால் திண்டுக்கல் மாவட்டம் மற்றும் வெளியூர்களிலிருந்து பெருமளவில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதால் குடமுழுக்கு விழா நடைபெறும் நாளான 07.09.2022 (புதன் கிழமை) அன்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க தகுந்த ஆணைகள் கேட்டுக்கொண்டுள்ளார். பிறப்பிக்குமாறு

2. திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவரின் கோரிக்கையினை அரசு கவனமுடன் பரிசீலித்து, திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு நடைபெறும் நாளான 07.09.2022 (புதன் கிழமை) அன்று அம்மாவட்டத்திலுள்ள மாநில அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் (பள்ளி. கல்லூரிகளில் நடைபெறும் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில்) உள்ளூர் விடுமுறை அறிவிக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. மேலும் அந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு. 01.10.2022 (சனிக்கிழமை) அன்று பணிநாளாக அறிவிக்கவும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தப்படுகிறார்.

மேற்கண்ட உள்ளூர் விடுமுறை தினமானது செலாவணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instruments Act. 1881)-or கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு அம்மாவட்டத்தில் உள்ள கருவூலம். சார்நிலைக் கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்பட தகுந்த ஏற்பாடு செய்யுமாறு திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.