அரசுப் பள்ளியில் குடற்புண் மாத்திரை சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு மயக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, September 9, 2022

அரசுப் பள்ளியில் குடற்புண் மாத்திரை சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு மயக்கம்

சேலம்: ஆத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று அரசு சார்பில் வழங்கப்பட்ட குடற்புண் மாத்திரை சாப்பிட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட மாணவிகள் மயக்கமடைந்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட குடற்புண் மாத்திரை 2400 மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

மாத்திரை சாப்பிட்ட மாணவிகளுக்கு சில மணி நேரங்களிலேயே மயக்கம் ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், மாணவிகளுக்கு மருத்துவர்கள் தீவிர பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அரசு சார்பில் வழங்கப்பட்ட குடற்புண் மாத்திரை சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஆத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.