அண்ணா பல்கலைக்கழகத்தில் இளநிலை திட்டமிடல் படிப்பு - வீட்டு வசதித் துறை உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, August 28, 2022

அண்ணா பல்கலைக்கழகத்தில் இளநிலை திட்டமிடல் படிப்பு - வீட்டு வசதித் துறை உத்தரவு

அண்ணா பல்கலைக்கழகத்தில் இளநிலை திட்டமிடல் படிப்பு வீட்டு வசதித் துறை உத்தரவு

அண்ணா பல்கலைக்கழகத்தில் இளநிலை திட்டமிடு தல் (பி-பிளான்) பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்த நிதி ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ள உத்தரவு:

இந்தியாவில் நகர்ப்புற திட்டமிடுதலுக்கான திறன்களில் சீர்திருத்தங்க ளைக் கொண்டு வர வேண்டும் என்பது உள்பட பல முக்கிய பரிந்துரை களை நீதி ஆயோக் அமைப்பு வழங்கியுள்ளது. வரும் 2032-ஆம் ஆண் டுக்குள் இந்தியாவில் 3 லட்சம் நகர் மற்றும் ஊரமைப்பு திட்டமிடுதல் அலுவலர்கள் தேவைப்படுவர் எனவும்,ஆண்டுக்கு 6 ஆயிரம்பி-பிளான் படிப்பும், 2 ஆயிரம் எம் - பிளான் படிப்பும் படித்தவர்கள் தேவையாக இருப்பார்கள் என நீதி ஆயோக் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு மிகப்பெரிய நகரங்களில் திட்டமிடுதல் மற்றும் கட்டுமான கலைத் துறை சார்ந்த புதிய கல்வி நிலையங்களைத் தொடங்கலாம் எனத்தெரிவித்துள்ளது.

அதன்படி, நிகழ் கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தில் இளநிலை திட்டமிடுதல் பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இந் தப் பாடம், ஒற்றைச் சாளர முறையில் நடைபெறும் பொது கலந்தாய்வு சேர்க்கை முறையில் இணைக்கப்படும்.

நிதி ஒதுக்கீடு:

அண்ணா பல்கலைக்கழகத்தில் இளநிலை திட்டமிடு தல் பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்த சென்னைப் பெருநகர் வளர்ச் சிக்குழுமம் மற்றும் நகர் ஊரமைப்பு இயக்ககம் ஆகியன ரூ.10 கோடிநிதி வழங்கும் என சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப் பைச் செயல்படுத்துவதற்கு முன்பாக, இதுகுறித்த கோரிக்கை அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் தரப்பிலிருந்து அரசுக்கு அனுப்பி வைக்கப் பட்டது. இளநிலை திட்டமிடுதல் படிப்புக்கு மாதந்தோறும் தொடரும் செலவினமாக ரூ.17.8 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மூலதனச் செலவினம், இயக்கச் செலவினம் உள்பட 5 ஆண்டுகளுக்கான செலவாக ரூ.18.54 கோடி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான தொடக்க நிதியாக ரூ.10 கோடி வழங்கப்படுகிறது. இதில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் 80 சதவீத நிதியையும், நகர் மற் றும் ஊரமைப்புத் துறை 20 சதவீத நிதியையும் அளிக்கும். இளநிலை திட்டமிடுதல் பாடத்துக்கான வரைவு பாடத் திட்டங்கள் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலிடம் அளிக்கப்பட்டுள்ளது.
திட்ட அமைப்பாளர்களை அதிக அளவில் உருவாக்கும் வகையில், சிஎம்டிஏ, டிடிசிபி நிதியில், அண்ணா பல்கலைக்கழகத்தில் 'பி.பிளான்' பட்டப் படிப்பை தொடங்க தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் நகர்ப்புற திட்டமிடல் திறன் தொடர்பாக நிட்டி ஆயோக் அளித்த பரிந் துரையில், திறன் பெற்ற திட்ட அமைப்பாளர்கள் (பிளானர்கள்) அதிகளவில் தேவைப்படுவதைச் சுட்டிக்காட்டியது.அதில்,வரும் 2032ஆம் ஆண்டில் 3 லட்சம் நகர மற்றும் ஊரமைப்பு திட்ட அமைப்பாளர்கள் நாடு முழு வதும் தேவைப்படுவதாகவும், குறிப்பாகஆண்டுக்குசராசரியாக 6ஆயிரம் இளநிலைதிட்டமிடல் படித்தவர்கள், 2 ஆயிரம் முது நிலைதிட்டமிடல் முடித்தவர்கள் என 8 ஆயிரம் பேர் தேவைப் படுவதாகவும் தெரிவித்தது.

மேலும், புதிதாக பெருநகரங் களில் 14 புதிய திட்டமிடல் மற்றும் கட்டடக்கலை பள்ளிகள் தொடங்கி, இளநிலை திட்ட வித்தார். மிடலில் ஆண்டுக்கு 75 பேரும், முதுநிலையில் பேரும் 60 சேர்க்கலாம். மற்ற இடங்களை பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் இதர மாநிலஅங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள், இதர கல்வி நிறுவனங்களில் இள நிலை திட்டமிடல் படிப்புக்கு வழங்கலாம் என்றும் தெரி வித்தது.

இதையடுத்து கடந்த 2021ஆம் ஆண்டு டிச.21ஆம் தேதி, நகர்ப்புற திட்டமிடல் தொடர் பான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாட்டில் நடைபெற்றது. அதில், 'தமிழ்நாட்டில் 3 கல்வி நிறுவனங்கள் முதுநிலை திட்டமிடல் படிப்பை வழங்கி வருகின்றன. ஆனால் இளநிலை திட்டமிடல் படிப்பு எந்த கல்வி நிறுவனத்தாலும் வழங்கப்ப டவில்லை' என்று சுட்டிக்காட் டப்பட்டது.

தமிழ்நாட்டில் தகுதிவாய்ந்த நகர திட்ட அமைப்பாளர்கள் பற்றாக்குறை இருப்பதால், ‘பி.பிளான்' அதாவது இளநிலை திட்டமிடல் படிப்புகளை, தமிழ்நாட்டில் சில கல்வி நிறுவ னங்களில்தொடங்கநடவடிக்கை எடுக்க உயர்கல்வித் துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதன் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் 'பி.பிளான்' படிப்பை தொடங்க முடிவெடுக்கப்பட்டு, நடப்பு ஆண்டில் ஒற்றைச்சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்தநடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது.தொடர்ந்து இந்தாண்டு பிப்.25இல் நடைபெற்ற நிட்டி ஆயோக் கூட்டத்தில், தற்போ துள்ள அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.அய்சிடிஇ) விதிகள்படி, அண்ணா பல்கலைக்கழகம்,அந்த படிப்பை தொடங்க உள்ளதாக உயர்கல்விச் செயலர் தெரி இந்நிலையில், வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துச்சாமி, சட்டப்பேரவையில் “சென்னை அண்ணா பல்கலைக்கழககட்ட டக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளியில், இளநிலை திட்ட மிடல் பாடத்திட்டத்தை அறி முகப்படுத்த சென்னை பெருநகர விட்டுள்ளது. வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) அதேபோல், மற்றும் நகர ஊரமைப்பு இயக்ககம் (டி.டி.சிபி)ரூ.10 கோடி வழங்கும்" என அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, நடைபெற்ற கூட்டத்தில் அண்ணாபல்கலைக்கழகத்துடன் சிஎம்டிஏ, டி.டி.சிபி இணைந்து இந்த படிப்பை செயல்படுத்து வதற்கானமுடிவுஎட்டப்பட்டது. தொடர்ந்து, சிஎம்டிஏ உறுப் பினர் செயலர் அளித்தபரிந்துரை விட்டுள்ளது.

அடிப்படையில், தமிழ்நாடு அரசு உத்தரவுகளைப் பிறப்பித் துள்ளது.

5 ஆண்டு படிப்பு

அதன்படி 5 ஆண்டு படிப் பான 'பி.பிளான்' படிப்புக்கு. முதல்கட்ட அடிப்படைநிதியாக ரூ.10 கோடியும், அடுத்தடுத்த 4 ஆண்டுகளுக்குரூ8.54 கோடியும் என ரூ.18.54 கோடி தேவை என்பதால், இந்த நிதியை சிஎம்டிஏவும், டிடிசிபியும் 80:20 என்ற விகிதத்தில் நிதி அளிக்க உத்தரவிட்டதோடு, முதல்கட்ட ரூ.10 கோடியை உடனே வழங் கவும்.மீதமுள்ள நிதியை 4 ஆண்டு களாக வழங்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும்,'பி.பிளான்' படிப்பை நடைமுறைப்படுத்த, அண்ணா பல்கலை, கட்டடவியல் மற்றும் திட்டமிடல் பள்ளியின் ஆய்வு அமைப்பான மனித குடியமர்வு மய்யத்தின் செயற்குழுவில் துணைத் தலைவராக சிஎம்டிஏ உறுப்பினர் செயலரை செயல் படவும். பாடத்திட்டத்துக்கான சார்புகுழுவில்உறுப்பினராக்கவும் ஒப்புதல் அளித்துள்ளது.

'பி.பிளான்' படிப்புக்கான ஆசிரியர்களை தேர்வு செய்யும் குழுவில் சிஎம்டிஏ உறுப்பினர் செயலர், டிடிசிபி இயக்குநர் ஆகியோரை உறுப்பினராக செயல்படவும் அரசு உத்தர அமைப்புகளும் சேர்ந்து பிளான்'' படிப்புக்கான இரு 'பி. ஒரு ஆராய்ச்சி மற்றும் திட்டமிடல் இருக்கையை உருவாக்கவும் அரசு அனுமதியளித்துள்ளது. இதுதவிர, ஆண்டுதோறும் இரு அமைப்புகளில் இருந்தும், தலா 2 அதிகாரிகளை 'டான்செட்' தேர்வு இன்றி சேர அனுமதிக்க

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.