6 மாத அகவிலைப்படி ஏமாற்றம்: ஆசிரியர் சங்கம் கண்டனம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, August 15, 2022

6 மாத அகவிலைப்படி ஏமாற்றம்: ஆசிரியர் சங்கம் கண்டனம்

R. Elangovan, state president of the Tamil Nadu Higher Secondary School Graduate Teachers' Association, said that the Chief Minister of Tamil Nadu has condemned the government for taking away the 6 months' allowance of government employees and teachers during the Independence Day celebrations.

He said: The regular allowance given to the employees based on the price increase every six months was not given with time. Even in economically backward and poor states including Bihar, the increase in subsidized rates is given in due course.

On this day of celebrating the 75th year of independence, we expected to receive an announcement to implement the old pension scheme for government employees and teachers as per the election promise. But not only the announcement of the increase in the allowance due on January 1, 2022 was delayed by 6 months, but the 6 months' arrears were also taken away, leaving the government employees and teachers in a state of distress.

The government should take steps to speed up the surrender amount for the old pension scheme and earned leave as promised in the election, he said.

6 மாத அகவிலைப்படி ஏமாற்றம்: ஆசிரியர் சங்கம் கண்டனம்

அரசு ஊழியர், ஆசிரியர்களின் 6 மாத அகவிலைப்படியை பறிக்கும் விதத்தில் சுதந்திர தின விழாவில் அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர், அரசை கண்டிப்பதாக தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் ஆர்.இளங்கோவன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை விலைவாசி உயர்வின் அடிப்படையில் ஊழியர்களுக்கு வழங்கும் வழக்கமான அகவிலைப்படி உயர்வை காலத்தோடு வழங்கவில்லை. பீகார் உள்ளிட்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய, ஏழை மாநிலங்களில் கூட உரிய காலத்தில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது.

75வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் இந்நாளில் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு தேர்தல் வாக்குறுதிப்படி பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தும் அறிவிப்பு வரும் என எதிர்பார்த்தோம். ஆனால் 2022 ஜன.,1ம் தேதியிட்டு வழங்கவேண்டிய அகவிலைப்படி உயர்வை 6 மாதம் தாமதமாக அறிவித்தது மட்டுமின்றி 6 மாத நிலுவையையும் பறித்து அரசு ஊழியர், ஆசிரியர்களை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கிவிட்டது

அரசு.தேர்தலில் அளித்த வாக்குறுதிபடி பழைய பென்ஷன் திட்டம், ஈட்டிய விடுப்புக்கான சரண்டர் தொகையை விரைந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.