சிவில் டிப்ளமோ முடித்தோருக்கு அரசு வேலை காத்திருக்கு..! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, July 31, 2022

சிவில் டிப்ளமோ முடித்தோருக்கு அரசு வேலை காத்திருக்கு..!

தமிழக அரசின் நில அளவை பதிவேடுகள் சார்நிலைப் பணிகளில் அடங்கும், சர்வேயர், வரைவாளர், உதவி வரைவாளர் ஆகிய பணிகளில் காலியாக உள்ள 1,089 பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாமென தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற டி.என்.பி.எஸ்.சியின் இணையதள பக்கத்திற்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 150. டி.என்.பி.எஸ்.சி நிரந்தர பதிவு ஏற்கனவே வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வுக் கட்டணம் : ரூ. 100, இருப்பினும் எஸ்.சி., எஸ்.டி., உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் டிப்ளமோ இன் சிவில் இன்ஜினியரிங் படிப்பு முடித்திருக்க வேண்டும் அல்லது நில அளவர் அல்லது வரைவாளர் சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.08.2022. (செப்டம்பர் 1 - 3 வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் அளிக்கப்படும்) காலி பணியிடங்களின் எண்ணிக்கை:

நில அளவர் (798) வரைவாளர் (236), அளவர்/உதவி வரைவாளர் ( 55). மொத்தம் 1,089 பணியிடங்கள்.

வயது : 01.07.2022 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்) ஆகிய பிரிவுகளுக்கு வயது வரம்பு கிடையாது.

தேர்வு நடைபெறும் நாள் : 6.11.2022

தேர்வு மையங்கள் :

சென்னை,கோவை, சிதம்பரம், காஞ்சிபுரம்,நாகர்கோவில்,மதுரை,உதகமண்டலம்,புதுக்கோட்டை,ராமநாதபுரம், சேலம், காரைக்குடி,தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர். தேர்வு முறை:

எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். 300 மதிப்பெண்களுக்கான கொள்குறி வகையிலான முதல் தாளில் சர்வே உள்ளிட்ட பாடம் தொடர்பாக கேள்விகள் கேட்கப்படும்.

150 மதிப்பெண்களுக்கான இரண்டாம் தாளில் பொதுத்தமிழ், பொது அறிவு வினாக்கள் உள்ளடங்கியதாக இருக்கும். தலா 3 மணி நேரம் தேர்வு நடைபெறும்.

கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் சென்று அறிவிக்கையை தரவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.