கன்னியாகுமரி திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் 108 வைணவ ஸ்தலங்களில் சிறப்புமிக்கது. இங்கு திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தி சுமார் 450 ஆண்டுகளாகிவிட்டது. www.kalviseithiofficial.comஇந்த நிலையில் கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்று திரு ப்பணிகளை செய்து கும்பாபிஷேகம் நடத்த முதலமைச்சர் உத்தர விட்டார். இதனைத் தொடர்ந்து தேவபிரசன்னம் பார்க்கப்பட்டு திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஜூலை 6ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்துவதற்கு நாள் குறிக்கப்பட்டுள்ளது.
www.kalviseithiofficial.com
இந்தநிலையில் திருவட்டார் பேரூராட்சி தலைவர் பெனிலாரமேஷ், அமைச்சர் மனோதங்க ராஜை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில், அனைத்து தரப்பினரும் கும்பாபிசேகத்தில் கலந்து கொள்ள வசதியாக ஜூலை 6ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும். பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க அன்றைய தினம் திருவட்டார் டாஸ்மார்க் கடையை மூட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் விடுத்திருந்தார்.
www.kalviseithiofficial.com
இந்த நிலையில், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை யொட்டி 6ஆம் தேதி (நாளை மறுநாள்) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Tuesday, July 5, 2022
New
பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை.. தமிழக அரசு உத்தரவு . !
Tamilnadu
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.