பள்ளி திறப்பில் எந்த மாற்றம்? - அமைச்சர் அன்பில் மகேஷ் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, June 9, 2022

பள்ளி திறப்பில் எந்த மாற்றம்? - அமைச்சர் அன்பில் மகேஷ்

பள்ளி திறப்பில் எந்த மாற்றமும் இல்லை: அமைச்சர் அன்பில் மகேஷ்

திருச்சி திருவெறும்பூர் சட்ட மன்றத் தொகுதிக்கு உள்பட்ட காட்டூரில் உள்ள தனியார் மகாலில் தனது சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட மக்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். இந்நிகழ்ச்சியில், செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், கல்வித் துறை தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு ஒன்றிய அரசு எப்பொழுதும் கடைசி நேரத்தில் தான் நம்மை அழைக்கின்றனர்.

தமிழ்நாட்டில் கல்வித் துறை தொடர்பான பல்வேறு நிகழ்சிகளை முதலமைச்சர் அறிவுறுத்தலின்பேரில் நடத்தி வருகிறோம்.

அதுமட்டுமல்லாமல் நம் மாநிலத்திற்கு என்ன தேவை என்பதை நாம் முடிவு செய்யும் கூட்டத்திற்குதான் முக்கியத்துவம் தருவோம். அது தான் நம் மாநிலத்திற்கும் நல்லது.

பள்ளி திறப்பில் எந்த மாற்றமும் இல்லை.

கொரொனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதில் ஏதும் மாற்றங்கள் செய்ய வேண்டுமா அல்லது விதிமுறைகள் பின்பற்ற வேண்டுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆலோசனையின் அடிப்படையில் முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து எங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டால் அதை பின்பற்றுவோம். நீட் தேர்வை நடத்துவதே பா.ஜ.க. அரசு தான், ஆனால் அண்ணாமலை அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாமே என நம்மிடம் கூறுகிறார் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.