மழலையா் வகுப்பு மாணவா் சோ்க்கையை உடனே தொடங்க வேண்டும்: அன்புமணி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, June 28, 2022

மழலையா் வகுப்பு மாணவா் சோ்க்கையை உடனே தொடங்க வேண்டும்: அன்புமணி

மழலையா் வகுப்பு மாணவா் சோ்க்கையை உடனே தொடங்க வேண்டும்: அன்புமணி

மழலையா் வகுப்பு மாணவா் சோ்க்கையை உடனே தொடங்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் 2,381 அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. ஆகிய மழலையா் வகுப்புகள் தொடா்ந்து நடத்தப்படும் என்று அரசு அறிவித்து 19 நாள்கள் ஆகியும் மழலையா் வகுப்புகளுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கப்படவில்லை. இந்த முக்கிய விஷயத்தில் பள்ளிக் கல்வித் துறை அலட்சியம் காட்டுவது கவலையளிக்கிறது. குழந்தைகளின் கற்றல் திறன் 3 வயதில் சிறப்பாக இருக்கும் என அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால், அந்தப் பருவத்தில் அவா்களுக்கு முறைசாா்ந்த கல்வி வழங்குவது அவசியம்.

இதை உணா்ந்து மழலையா் வகுப்புகளுக்கான மாணவா் சோ்க்கை அறிவிப்பை அரசு உடனடியாக வெளியிட வேண்டும். ஒரு வாரத்துக்குள் மாணவா் சோ்க்கையை நிறைவு செய்து, அடுத்த வாரம் முதல் வகுப்புகளைத் தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் அன்புமணி ராமதாஸ்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மெட்ரிக் பள்ளிகளிலும் 69% இட ஒதுக்கீட்டை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டிருக்கிறது. மாணவர் சேக்கையில் சமூகநீதியை நிலைநாட்ட பள்ளிக்கல்வித்துறை காட்டும் அக்கறை பாராட்டத் தக்கது!

தமிழ்நாட்டில் மெட்ரிக் பள்ளிகள் தொடங்கப்பட்ட நாளில் இருந்தே அவை தமிழக அரசின் இட ஒதுக்கீட்டை கடைபிடிப்பது கட்டாயம் ஆகும். ஆனால், பெரும்பான்மையான தனியார் பள்ளிகள் 69% இட ஒதுக்கீட்டை கடைபிடிப்பதில்லை என்பது தான் வேதனையான உண்மை

ஊரகப்பகுதிகளில் உள்ள சாதாரண மெட்ரிக் பள்ளிகள் 69% இட ஒதுக்கீட்டை பின்பற்றுகின்றன. அதிகக் கட்டணம் வசூலிக்கும் நகர்ப்புறங்களில் உள்ள புகழ் பெற்ற பள்ளிகள் தான் தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு விதிகளை மதிப்பதில்லை. அவை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!

அனைத்து மெட்ரிக் பள்ளிகளிலும் 69% இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்; ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை முடிவடைந்த பிறகு பள்ளி வாரியாக இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது குறித்த விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்!

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.