பள்ளிகள் திறப்பால் கொரோனா அதிகரிக்க வாய்ப்பு.. சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை..! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, June 2, 2022

பள்ளிகள் திறப்பால் கொரோனா அதிகரிக்க வாய்ப்பு.. சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை..!

In the neighboring state of Kerala, two months later the corona impact again crossed the thousand mark. There were 197 people newly infected with corona yesterday.

The corona spread rate in the state is 7.07 percent. The number of people now in treatment has risen to 5,728.

Also, in the last one week alone, the number of corona victims in Kerala has doubled causing fears. The worst affected districts are Ernakulam, Thiruvananthapuram and Kottayam.

With schools set to reopen in Kerala this week after the summer holidays, the severity of the outbreak is expected to increase further.

In this context, the state's Health Minister Veena George has advised parents to ensure that children go to school wearing masks.

He said, “Precautions are important for students and teachers. Parents and teachers should check the health of the children daily.

Also, students with corona symptoms should not go to school. All children over the age of 12 should be vaccinated against corona, ”he advised.

Medical health experts and epidemiologists in the state have warned the public to take all necessary precautionary measures.

Also, with the onset of the monsoon season in Kerala and the rising incidence of the flu, people have been urged not to reduce safety measures against corona.
அண்டை மாநிலமான கேரளாவில், இரண்டு மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை தாண்டியது. அங்கு நேற்று புதிதாக 197 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் கொரோனா பரவல் விகிதம் 7.07 சதவீதமாக உள்ளது. இப்போது சிகிச்சையில் இருப்பவர் எண்ணிக்கை 5,728 ஆக உயர்ந்தது.

மேலும், கடந்த ஒரே வாரத்தில், கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எர்ணாகுளம், திருவனந்தபுரம் மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது.

கோடை விடுமுறைக்கு பின் கேரளாவில் இந்த வாரம் முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், தொற்றின் தீவிரம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், குழந்தைகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து பள்ளிக்கு செல்வதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும் என அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முன்னெச்சரிக்கை முக்கியமானது. பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளின் உடல்நிலையை தினமும் பரிசோதிக்க வேண்டும்.

மேலும், கொரோனா அறிகுறி உள்ள மாணவர்கள் பள்ளிக்கு செல்லக்கூடாது. 12 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்" என்று அவர் அறிவுறுத்தினார்.

மாநிலத்தில் உள்ள மருத்துவ சுகாதார நிபுணர்கள் மற்றும் தொற்று நோயியல் நிபுணர்கள், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.

மேலும், கேரளாவில் பருவமழை காலம் தொடங்கியுள்ளதால், காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்துள்ள நிலையில், கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு வழிமுறைகளை குறைக்க வேண்டாம் என்று மக்களை வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.