6.5 லட்சம் மாணவர்கள் ஆப்சென்ட்.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, June 2, 2022

6.5 லட்சம் மாணவர்கள் ஆப்சென்ட்.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!

The school education department has ordered the district primary education officers to identify 6.5 lakh students who did not appear for the 10th, 11th and 12th class general examinations in Tamil Nadu and take action to participate in the immediate examinations.

The general elections for 10th, 11th and 12th classes in Tamil Nadu which started on 5th May last lasted till 31st. A total of 27 lakh students including 10th, 11th and 12th class wrote the exam.

Of these, 1,95,292 students appeared for the Class XII examination, 2,58,641 students for the Class XII examination and 2,25,534 students for the Class X examination, for a total of 6,49,467 students.

Following this, the school education department has instructed the district primary education officers to take action to identify those students and make them participate in the immediate examinations to be held in July.

Following this, the head teachers of all the schools have been instructed by WhatsApp to prepare an action plan for the same. தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத 6.5 லட்சம் மாணவர்களை கண்டறிந்து உடனடித் தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு கடந்த மே மாதம் 5-ம் தேதி தொடங்கிய பொதுத்தேர்வுகள் 31-ம் தேதி வரை நடைபெற்றது. 10, 11, 12-ம் வகுப்பு வரை சேர்த்து மொத்தம் 27 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

இதில், 12-ம் வகுப்பு தேர்வுகளில் 1,95,292 மாணவர்கள், 11-ம் வகுப்பு தேர்வில் 2,58,641 மாணவர்கள், 10-ம் வகுப்பு தேர்வில் 2,25,534 மாணவர்கள் என மொத்தமாக 6,49,467 மாணவர்கள் தேர்வு எழுத வராதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அந்த மாணவர்களை கண்டறிந்து ஜூலையில் நடைபெறும் உடனடித் தேர்வுகளில் பங்கேற்க வைக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, அதற்கான செயல் திட்டத்தை தயார் செய்யுமாறு அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் வாட்ஸ் அப் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.