இம்மாநிலத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - 99.26% தேர்ச்சி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, June 15, 2022

இம்மாநிலத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - 99.26% தேர்ச்சி

கேரளாவில் 10 வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கேரளா மாநிலத்தில் இம்முறை தேர்ச்சி சதவீதம் 99 புள்ளி 26 ஆக உள்ளது. இது கடந்த ஆண்டைவிட தேர்ச்சி சதவீதம் 0.21 சதவீதம் குறைவு ஆகும். தேர்வு எழுதிய மாணவர்களில் 4 லட்சத்து 26 ஆயிரத்து 469 பேரில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 303 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 44 ஆயிரத்து 363 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் ஏ + மதிப்பெண் பெற்றுள்ளனர். மலப்புரம் மாவட்டம் ஏ+ மாணவர்கள் 3 ஆயிரத்து 024 பேருடன் முதலிடத்தில் உள்ளது. கண்ணூர் 99.76 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தில் உள்ளது. தேர்வு முடிவுகளை கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி வெளியிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.