1 முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான தகவல் தொடர்பு தொழில் நுட்பம், மாணவர்கள் உடல் நலன் மற்றும் மன நலம் பணியிடைப் பயிற்சிக்கான நிதி விடுவித்தல் - சார்பு - - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, June 17, 2022

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான தகவல் தொடர்பு தொழில் நுட்பம், மாணவர்கள் உடல் நலன் மற்றும் மன நலம் பணியிடைப் பயிற்சிக்கான நிதி விடுவித்தல் - சார்பு -

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - 2022-23 - 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான தகவல் தொடர்பு தொழில் நுட்பம், மாணவர்கள் உடல் நலன் மற்றும் மன நலம் பணியிடைப் பயிற்சிக்கான நிதி விடுவித்தல் - சார்பு.

1.2022-23ஆம் ஆண்டிற்கான கால அட்டவணை

2. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநரின்

செயல்முறைகள், ந.க.எண்.2818/ஈ1/2021, நாள் 14.06.2022



பார்வை

பார்வை 1-ல் உள்ள அட்டவணையின் படி, 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 18.06.2022 அன்று வட்டார வளமைய கூட்டத்தில் காலை தகவல் தொடர்பு தொழில் நுட்பம் பற்றியும் மாலை மாணவர்கள் உடல் நலம் மற்றும் மன நலம் சார்ந்த பயிற்சி நடத்தப்பட உள்ளது. அதற்கிணங்க 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் 18.06.2022 அன்று தாங்கள் பணிபுரியும் பள்ளிகளுக்கு அருகிலுள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் அல்லது வேறு மையத்தில் தவறாமல் பங்கேற்க அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் பார்வை 2-ல் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இப்பணியிடை பயிற்சி மாவட்டங்களில் மேற்கொள்ள 1 ஆசிரியருக்கு ரூ.50/- வீதம் (Refreshment Rs.40/- and other contingency including cleaning and water charges) மொத்தம் உள்ள 2,85,271 ஆசிரியர்களுக்கு தேவையான நிதி ரூ. 1,42,63,550/- (ரூபாய் ஒரு கோடியே நாற்பத்தி இரண்டு இலட்சத்து அறுபத்தி மூவாயிறத்து ஐநூற்று ஐம்பது மட்டும்) மாவட்ட வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.