தமிழகத்தில் கவுன்சிலிங்கே இல்லாமல் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களை நேரடியாக சேர்க்க திட்டம்? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, May 10, 2022

தமிழகத்தில் கவுன்சிலிங்கே இல்லாமல் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களை நேரடியாக சேர்க்க திட்டம்?

மாணவர்களை நேரடியாக சேர்க்க திட்டம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் கவுன்சிலிங் நடத்தாமல் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களை நேரடியாக அழைத்து தேர்ந்தெடுக்க முடியுமா என்ற ஆலோசனை நடத்தி வருவதாக அமைச்சர் பொன்முடி கூறினார்.

துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி:

அமைச்சர் பதில் சொல்லும்போது பல்வேறு அரசு கலைக் கல்லூரிகளிலே காலியிடங்கள் அதிக அளவிலே இருக்கின்றன என்று சொன்னார். அப்படி தமிழ்நாட்டிலே இருக்கின்ற அத்தனை அரசு கலைக் கல்லூரிகளில் உள்ள காலியிடங்களுக்காக தனியாக கவுன்சிலிங் நடத்தி, அதிலே மாணவர்களை சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா. ஏனென்றால், பல்வேறு மாணவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்று சொல்லக்கூடிய நிலை இருக்கிறது. அமைச்சர் க.பொன்முடி:

அரசு கல்லூரிகளில் கவுன்சிலிங் என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் கிடையாது. கவுன்சிலிங் என்றால் உடனே ஆன்லைனில் நடத்தலாம் என்று சொல்வார்கள். சென்ற ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் பதிவில் எவ்வளவு குளறுபடிகள் இருந்தது என்பதை நாம் பார்த்தோம். எனவே, அதை பற்றியெல்லாம் நாங்கள் பரிசீலித்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே, அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் சேருகின்ற மாணவர்களுக்கு 10 இடத்தில் வைத்து, நேர்முகமாக அவர்களை தேர்ந்தெடுக்க முடியுமா என்ற ஆலோசனைகளையெல்லாம் இந்த அரசு செய்து கொண்டிருக்கிறது.

எனவே, கவுன்சிலிங் வேண்டாம். எங்கெங்கு இடம் இருக்கின்றதோ, அந்தந்த கல்லூரிகளில் அவர்கள் சேர்வதற்கு நாம் நேரம் தருகிறோம். அந்த தேதிக்குள் அவர்கள் சேரவில்லையென்று சொன்னாலும், அதற்கு பிறகும் விண்ணப்பித்து சேரலாம். ஆக, விண்ணப்பிக்காத மாணவர்கள்கூட அரசு கல்லூரிகளில் சேர்வதற்கான வாய்ப்புகளை கொடுத்திருக்கிறோம். ஆகவே, கவுன்சிலிங் தேவையில்லை. இவ்வாறு விவாதம் நடந்தது. விண்ணப்பிக்காத மாணவர்கள்கூட அரசு கல்லூரிகளில் சேர்வதற்கான வாய்ப்புகளை கொடுத்திருக்கிறோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.