உரிமை உண்டு பள்ளிகள் எங்கே: சுப்ரீம் கோர்ட் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, April 7, 2022

உரிமை உண்டு பள்ளிகள் எங்கே: சுப்ரீம் கோர்ட்

உரிமை உண்டு பள்ளிகள் எங்கே: சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: &'மாநிலங்களின் நிதி நிலையை மனதில் வைத்தே, எந்தவொரு புதிய திட்டங்களையும் மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்&' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பல்வேறு குடும்ப வன்முறைகளில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம், 2005ல் அமலுக்கு வந்தது. கணவன், மாமியார், மாமனார் உள்ளிட்டோர் மீது புகார் அளித்து, குடும்பத்தினரின் ஆதரவை இழந்த பெண்களுக்கு காப்பகம் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகளை இச்சட்டத்தின் கீழ் உருவாக்கக் கோரி, தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

கடந்த பிப்ரவரியில் இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், குடும்ப வன்முறை பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு, பொருளாதார அடிப்படையில் மத்திய அரசு அளித்து வரும் ஆதரவு குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மத்திய அரசு ஒரு புதிய சட்டத்தை அமல்படுத்தும் போது, அதை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மாநிலங்களுக்கு உள்ளன. ஆனால், அதை முழுமையாக அமல்படுத்த தேவையான நிதி ஆதாரங்கள் மாநில அரசுகளிடம் உள்ளதா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.கல்வி உரிமை சட்டம் வாயிலாக உரிமை கிடைத்ததே ஒழிய, பள்ளிக் கட்டடம் கிடைக்கவில்லை.

அதை கட்ட வேண்டிய கடமை நகராட்சி, மாநகராட்சி, மாநில அரசுகளுக்கு உள்ளன. கட்டடம் கட்டினாலும் ஆசிரியர் நியமனத்துக்கு எங்கே போவது? எனவே, ஒரு திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன், மாநில அரசுகளின் நிதி நிலையை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு தொடர்பான விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய, மத்திய அரசுக்கு இரண்டு வார அவகாசம் அளித்த நீதிமன்றம், விசாரணையை வரும் 26க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.