போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ரூ.1.15 கோடியில் நூலகம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, April 7, 2022

போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ரூ.1.15 கோடியில் நூலகம்

போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ரூ.1.15 கோடியில் நூலகம்

உளுந்துார்பேட்டை:

உளுந்துார்பேட்டை நகராட்சியின் நகர மன்ற முதல் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, நகரமன்ற தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வைத்தியநாதன் முன்னிலை வகித்தார். கமிஷனர் சரவணன் வரவேற்றார். அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் நகரமன்ற தலைவர் பேசுகையில், &'பெண்களுகளுக்கு முன்னுரிமை கொடுத்து பெரியாரின் கனவை முதல்வர் நிறைவேற்றி தந்துள்ளார். அதற்கேற்ப உளுந்துார்பேட்டை நகராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 50 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பளித்து ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கு பதவியிடங்களை வழங்கியுள்ளார். நிதி ஆதாரம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. மக்களின் தேவைகளை ஆராய்ந்து தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்&' என்றார்.

துணைத் தலைவர் பேசுகையில், &'மக்களுக்கு சேவையாற்ற நகராட்சி பதவியிடங்களுக்கு வாய்ப்பளித்த முதல்வருக்கும். அமைச்சருக்கும் நன்றி. நகராட்சி அலுவலக கட்டடம் விரைவில் கட்டப்படும். குடிநீர் பிரச்னை இல்லாத நிலை ஏற்படுத்தப்படும். பாதாள சாக்கடை திட்ட பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வார்டு பகுதிக்கு தேவையான அனைத்து வசதிகளும் நிதி ஒதுக்கீட்டின் பேரில் விரைந்து முடிக்கப்படும்&' என்றார்.

கூட்டத்தில், நகராட்சியாக தரம் உயர்த்தியதற்காக முதல்வருக்கு நன்றியை தெரிவிப்பது. நகராட்சிக்கு சொந்தமான கடைகள் குத்தகை காலமான 9 ஆண்டுகள் முடிவடைந்து தொடர்ந்து அதே நபரிடம் உள்ள 100 கடைகளையும் ஏலம் விடவும், புதுப்பிக்கவும் முடிவு செய்யப்பட்டது. மாணவர்கள், அரசு துறை போட்டி தேர்வுகளுக்கு தயார் படுத்தும் வகையில் 1.15 கோடி ரூபாய் மதிப்பில் நுாலகத்துடன் கூடிய மையம் அமைப்பது என்பது உட்பட 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தவறாக பாடப்பட்ட தேசிய கீதம்

கூட்டத்தில், வார்டு கவுன்சிலர்கள் தி.மு.க., செல்வம் டேனியல்ராஜ், ம.தி.மு.க., ஜெய்சங்கர் ஆகியோர் ஒவ்வொரு தீர்மானத்திற்கும் விளக்கம் கேட்டு விவாதம் செய்து கொண்டே இருந்ததால் பரபரப்பு நிலவியது. அதுமட்டுமின்றி, கூட்டம் முடிந்ததும் இறுதியில் தேசிய கீதம் பாடப்பட்டது. நகராட்சி ஊழியர் ஒருவர் பாடியபோது தப்பும் தவறுமாக பாடினார். இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இருப்பினும் விடாப்பிடியாக தவறாகவே பாடி முடித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.