துணைவேந்தர் நியமன சட்ட மசோதா: இனி என்ன நடக்கும்? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, April 25, 2022

துணைவேந்தர் நியமன சட்ட மசோதா: இனி என்ன நடக்கும்?

துணைவேந்தர் நியமன சட்ட மசோதா

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

துணைவேந்தர் நியமனம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும் வகையில், சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி கொண்டு வந்த சட்ட மசோதா விவாதங்களுக்குப் பின் நிறைவேற்றப்பட்டது.

குஜராத், ஆந்திரம், தெலங்கானாவில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசுகளே நியமிக்கின்றன. இந்த நிலையில், மாநில அரசுகளே பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கலாம் என்ற புஞ்சி ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. இந்த ஆணைய பரிந்துரையை ஏற்று, பல்கலைக்கழக துணைவேந்தர்களை இனி மாநில ஆளுநருக்கு பதிலாக ஆளும் அரசே நியமிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதா பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டு, விவாதங்களுக்குப் பின் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனால் இனி என்ன நடக்கும்?

இந்தப் புதிய சட்டமசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், இதுவரை ஒரு பல்கலைக்கழகத்துக்கு, தேர்வுக்குழு பரிந்துரைக்கும் மூன்றில் ஒருவரை மாநில ஆளுநர், துணைவேந்தராக தேர்வு செய்யும் நடைமுறை இருக்காது.

அதற்கு பதிலாக, தேர்வுக்குழு பரிந்துரை மீது தமிழக அரசே முடிவு செய்து, பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்கும் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.