பேப்பர், மூலப்பொருட்கள் விலை உயர்வு பள்ளி நோட்டு விலை 70 சதவீதம் அதிகரிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, April 3, 2022

பேப்பர், மூலப்பொருட்கள் விலை உயர்வு பள்ளி நோட்டு விலை 70 சதவீதம் அதிகரிப்பு

மூலப்பொருட்களின் விலை

பேப்பர் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வால் பள்ளி நோட்டுக்கள் வியாபாரிகளின் கணக்கு பதிவேடுகளின் விலை 70 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. தொழிலாளர்களின் சம்பளம்

சேலம் மாவட்ட ஆப்செட் பிரிண்டர் அசோசியேஷன் கெளரவ தலைவர் முத்து கோபால கிருஷ்ணன் கூறியதாவது: பள்ளி நோட்டுகளுக்கான லேச்சர் பேப்பர் கடந்த ஆண்டு டன் 68,000 முதல் 70,000 ரூபாய்க்கு விற்றது தற்போது 90,000 ரூபாய்க்கு விற்கிறது.வியாபார கணக்கு நோட்டுக்கள் பதிவேடுகள் தயார் செய்ய பயன்படுத்தப்படும் கிரீம் ஓ ஒயிட் ஓ பேப்பர் டன் 39,000 ரூபாய்க்கு விற்றது 75,000 ரூபாயாகவும் ஹார்ட் பேப்பர் டன் 60,000 ரூபாயிலிருந்து 1.12 லட்சம் ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

அட்டை டன் 10,000 ரூபாயில் இருந்து 26 ஆயிரமாக உயர்ந்துள்ளது. நுால் பசை கலிக்கோ விலை 30 சதவீதம் உயர்ந்துள்ளது. தொழிலாளர்களின் சம்பளம் 25 சதவீதம்அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து நோட்டுக்களின் விலையும் 60 முதல் 70 சதவீதம் உயர்ந்துள்ளது.இவ்வாறு கூறினார். சேலத்தை சேர்ந்த புத்தக கடை உரிமையாளர் குமார் கூறியதாவது:

பள்ளி நோட்டு ஒரு குயர் (136 பக்கம்) மொத்த விலையில் 35 ரூபாய்க்கு விற்றது 47 ரூபாயாகவும் 68 பக்கம் ரூ.18ல் இருந்து 26, 80 பக்கம் ரூ. 21ல் இருந்து 28 ஆகவும், கிங் சைஸ் (156 பக்கம்) ரூ.51ல் இருந்து 65 ஆகவும்உயர்ந்துள்ளது.

ஏ4 சைஸ் பேப்பர் 70 ஜி.எஸ்.எம். 145 ரூபாய்க்கு விற்றது 206 ரூபாயாகவும், 80 சி.எஸ்.எம். 170 ரூபாய்க்கு விற்றது 240 ரூபாயாகவும் பள்ளி கல்லுாரிகளில் பயன் படுத்தப்படும் சாட் பேப்பர் 80 சீட்டுக்களை கொண்ட ஒரு பாக்கெட் 530 ரூபாய்க்கு விற்றது 670 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.