ஆசிரியர் - மாணவர் சார்ந்த பிரச்னைகள் - பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள் அவசியம் - அன்புமணி ராமதாஸ் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, April 23, 2022

ஆசிரியர் - மாணவர் சார்ந்த பிரச்னைகள் - பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள் அவசியம் - அன்புமணி ராமதாஸ்

பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள்

காவல் துறை சரியாக இருந்தால் காவல் நிலைய மரணம் என்பது ஏற்படாது எனவும், அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொறுத்த வேண்டும் என்றும் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக அரசு அலுவலர் மற்றும் பணியாளர் உரிமை நலசங்கம், தமிழக ஆசிரியர்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்ற சங்கம் ஆகிய 2 சங்கங்களை பாமக நிறுவனர் ராமதாஸ் தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பாமக தலைவர் ஜி.கே.மணி, இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி பேசியதாவதுமின் வெட்டு என்பது 20 ஆண்டுகால பிரச்னை. காவல் துறை சரியாக இருந்தால் காவல் நிலைய மரணம் என்பது ஏற்படாது. அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொறுத்த வேண்டும். மது கலாச்சாரம் பள்ளி மாணவர்கள் மத்தியில் அதிகமாகியுள்ளது. இதில் மாணவிகளும் இருப்பது மன வேதனை அளிக்கிறது. மது விற்பனையை தடை செய்ய வேண்டும். அன்புமணி ராமதாஸ்

ஆட்சிக்கு வந்த முதல் கையெழுத்து மது விலக்காக இருக்கும் என ஸ்டாலின் சொன்னார். ஆனால் ஒரு வருடம் ஆகிவிட்டது. மது விலக்கு குறித்து அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். கலாச்சாரம் மாறி வருவதால் ஆசிரியர் - மாணவர் சார்ந்த பிரச்னைகள் உள்ளது. ஆளுநரின் தேனீர் விருந்தை திமுக புறக்கணித்திருக்க கூடாது ஆளுநர் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். கால நிலை அவசர நிலையை பிரகடனப்படுத்த வேண்டும். வெப்பத்தை குறைக்க அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.